பங்குதாரர் ஈடுபாட்டை புரட்சிகரமாக மாற்றியமைத்துள்ள DFCC வங்கி | தினகரன் வாரமஞ்சரி

பங்குதாரர் ஈடுபாட்டை புரட்சிகரமாக மாற்றியமைத்துள்ள DFCC வங்கி

அனைவருக்கும் ஏற்ற வங்கியான DFCC வங்கி, 5 ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறைப்படுத்தப்பட்ட அதன் தற்போதைய நிலையான, பங்குதாரர்களை மையமாகக் கொண்ட, பன்முக வடிவ, பன்முக- ஊடக அணுகுமுறைக்கு ஏற்ப, 2021 ஆம் ஆண்டிற்கான அதன் ஆண்டறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளது. அறிக்கையிடலுக்கான இந்த தனித்துவமான அணுகுமுறையானது, டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்டதாக உலகம் மாறி வருகின்றமைக்கு மத்தியில், இன்னும் கூடுதலான அளவில் பங்குதாரர்களை மையப்படுத்திய வங்கியாக மாற உதவியுள்ளது. அதன் பரந்த மற்றும் மாறுபட்ட பங்குதாரர் சமூகத்தின் பல்வேறு தேவைகள் மற்றும் விருப்பங்களையும் இதன் மூலமாகப் பூர்த்தி செய்கிறது.

DFCC வங்கியின் ஆண்டறிக்கையானது தொழில்துறையில் பின்வரும் தனித்துவமான அம்சங்கள் மற்றும் வடிவங்களைக் கொண்டுள்ளது: பங்குதாரர் குழுக்களின் பல்வேறு நலன்களை இலக்காகக் கொண்டு HTML வடிவத்தில் ஒரு விரிவான ஒருங்கிணைந்த ஆண்டறிக்கை மற்றும் தகவல்களை எளிதாகக் கண்டறிந்து, பதிவுசெய்து, பகிர்ந்து கொள்வதற்கான மேம்பட்ட பயனர் அனுபவத்தை வழங்குகிறது. அதிக தேடுபொறி திறன் கொண்டதாக (search engine) இருப்பதால், இந்த வடிவம் பரந்த அளவிலான பார்வையாளர்களையும் இலக்கு வைக்கிறது. மேலும், ஏனைய போட்டியாளர்களிடமிருந்து ஆண்டறிக்கையின் தோற்றம் மற்றும் உணர்வை வேறுபடுத்தும் வகையில் இடதுகைப்பக்க புத்தகவுரு சார்ந்த, கோப்பி மேசை புத்தக பாணியிலான வடிவமைப்பானது PDF, அச்சு மற்றும் குறுவட்டு (CD) வடிவங்களில் ஒரு சுருக்கமான ஒருங்கிணைந்த ஆண்டறிக்கை முதன்மையாக ஆவண காப்பகம் மற்றும் சட்டப்பூர்வ தேவைப்பாட்டு சமர்ப்பித்தல் நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அறிதல் குறிப்புக்காக ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் ஆண்டறிக்கை முக்கிய சுருக்கங்கள் மற்றும் வெளியீட்டிற்குப் பிந்தைய முக்கியமான தகவல்களை உடனடியாக பெற்றுக்கொள்வதற்கான ஆண்டறிக்கை புதுப்பிப்பு நுழைமுகம் மற்றும் இணைந்த ஆண்டறிக்கை புதுப்பித்தல் செயலி ஆகியனவும் உள்ளன.

இந்த ஆண்டு, வங்கியின் ஆண்டறிக்கையானது, “Designed to Excel” கருப்பொருள் வடிவில் வடிவமைக்கப்பட்டது.

 

Comments