சிறந்த கைத்தொழிலுக்கான தங்கவிருது வென்ற ஆர். எம். பெரேரா நிறுவனம் | தினகரன் வாரமஞ்சரி

சிறந்த கைத்தொழிலுக்கான தங்கவிருது வென்ற ஆர். எம். பெரேரா நிறுவனம்

தளபாட உற்பத்தி மற்றும் உட்புற வடிவமைப்புத் துறையின் முன்னோடி நிறுவனமான ஆர்.எம் பெரேரா தனியார் நிறுவனம், இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை ஏற்பாடு செய்த சிறந்த கைதொழிலுக்கான விருது விழாவில் மத்திய மற்றும் பாரியளவிலான பிரிவுகளில் தங்கவிருதை வென்றுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் நடைபெற்ற விருது விழாவில் அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் ஆர். எம். பெரேரா தமக்கான விருதை பெற்றுக்கொண்டார்.

தொடர்ச்சியான முறையில் வர்த்தகத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச்செல்லுதல், பொருட்கள் உற்பத்திக்கு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தல் மற்றும் நாட்டின் பொருளாதாரத்துக்கு பங்களிப்பு செய்தமை ஆகிய காரணிகள் இந்த விருதை வெல்வதில் பெரும் பங்காற்றியுள்ளன.

40 ஆண்டுகளுக்கு மேலாக உயர் தரத்திலான மரத் தளபாடங்களையும் உட்புற வடிவமைப்புகளையும் வழங்கியதன் மூலம் ஆர். எம்.பெரேரா நிறுவனம் பெரும் புகழை ஈட்டியுள்ளது. அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள் மற்றும் குடிமனைகளுக்கு மரத் தளபாடங்களை வழங்கியமை மற்றும் உட்புற வடிவமைப்பு பணிகளை மேற்கொண்டதன் மூலம் நீண்ட காலத்திற்கு உழைக்கக்கூடிய கலைநயத்துடன் கூடிய பெறுமதியை வழங்குவதற்கு ஆர்.எம். நிறுவனத்தினால் முடிந்துள்ளது.

உயர் தரத்திலான மூலப்பொருள் பாவனை, அனுவபமிக்க பணியாளர்களின் பங்களிப்பின் மூலம் பொருள் உற்பத்தி மற்றும் சேவை வழங்குதல் மூலம் இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையினை பெரிதும் வென்றுள்ளது. இந்த விருதை வழங்கி எம்மை ஊக்கப்படுத்திய கைத்தொழில் அபிவிருத்திச் சபைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

 

Comments