இலங்கையில் சமையல் புரட்சி “Janalipa” மற்றும் ‘EZ Industrial Stove’ அடுப்பை அறிமுகப்படுத்தும் EZ Stove | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையில் சமையல் புரட்சி “Janalipa” மற்றும் ‘EZ Industrial Stove’ அடுப்பை அறிமுகப்படுத்தும் EZ Stove

வழக்கமான LPG சமையல் எரிவாயு அடுப்புகளுக்கு மாற்றீடாக, காப்புரிமை பெற்ற, கரியால் இயங்கும் இரண்டு புதிய தயாரிப்புகளை Janalipa மற்றும் EZ Industrial Stove அடுப்பை EZ Stove அண்மையில் வெளியிட்டுள்ளது. EZ Stove என்பது ஒரு திருப்புமுனை மிக்க சமூக நிறுவனமாகும். இது சமூகங்களுக்கு அதிகாரம் வழங்கும் அதே நேரத்தில் சூழல் மற்றும் பொருளாதாரம் தொடர்பான விடயங்களிலிருந்து LPG அடுப்புகளுக்கு நிலைபேறான ஒரு மாற்றீடாகும். குறிப்பாக தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடியின் கீழ் இது ஒரு சிறந்த மாற்றீடாகும். தற்போது வரை, அசல் வடிவமைப்புடனான 100,000 இற்கும் அதிகமான EZ Stove அடுப்புகள் விற்பனையாகியுள்ளன. இதன் மூலம் அத்தகைய மாற்றீட்டை நோக்கிய பொது மக்களின் ஆர்வம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Janalipa என்பது EZ Turbo Charcoal Stove கரி அடுப்பின் செலவு குறைந்த பதிப்பாகும். தேங்காய் ஓட்டு கரி மூலம் எரியும், அதிக வெப்பநிலையைத் தாங்கும் வகையிலான களிமண்ணால் அதன் உடல் ஆக்கப்பட்டுள்ளதுடன், உயர் தரத்திலான வார்ப்பு இரும்பினால் செய்யப்பட்ட தட்டு ஆகியவற்றை இது கொண்டுள்ளது. வேகமான விசிறி (turbo fan) வசதியானது, குறைந்த புகை, குறைந்த சாம்பல் போன்றவற்றிற்கு உதவுகிறது. இது தொடர்பான மேலதிக தகவலுக்கு அல்லது கொள்வனவுக்கு, www.janalipa.lk இணையத்தளத்தைப் பார்வையிடவும்.

EZ தொழில்துறை அடுப்பானது, ஹோட்டல்கள், சிற்றுண்டி ச்சாலைகள் போன்றவற்றில், அனைத்து வகையான சமையலுக்குமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுப்புக் கரி, தேங்காய் ஓடுகள் அல்லது மரத் துண்டுகள் மூலம் வெப்பத்தை ஏற்படுத்த முடியும். இதில் 3 அடி வரையான விட்டம் கொண்ட பாத்திரங்களை வைத்து சமைக்க முடியும். இதில் உள்ள turbo fan வசதியானது, வேகமாக சமைப்பதற்கு வசதியளிக்கிறது.

ஜனாதிபதியால் வழங்கப்பட்ட விஞ்ஞானம் மற்றும் தொழில்நு ட்பத்திற்கான தேசிய விருது, மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் அகில இலங்கை புத்தாக்க விருது, தேசிய விஞ்ஞான அறக்கட்டளையின் (NSF) பல்வேறு பரிசுத் தொகைகள் மற்றும் விருதுகள், தொழில்நுட்ப விருது வழங்கும் நிகழ்வில் இலங்கையின் பொறியியலாளர்கள் நிறுவகத்தின் (IESL) அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு பாராட்டுகளையும் பரிசுகளையும் EZ Stove வென்றுள்ளது.

Comments