எனது பாடசாலை அழகானது | தினகரன் வாரமஞ்சரி

எனது பாடசாலை அழகானது

மறக்க முடியாத நண்பர்கள் அழியாத நினைவுகள் என அனைத்தையும் தந்தது எனது பாடசாலை தான். என்னுடைய பாடசாலை மிகவும் அழகானது. அதனுடைய சூழல் கல்வி கற்க செல்கின்ற எங்களை மேலும் மகிழ்ச்சியடைய செய்தது. 

அங்கே அழகிய மரங்களின் நிழல் எம்மை மகிழ்விக்கின்றன. அதன் கீழ் நாங்கள் மகிழ்ச்சியாக விளையாடுவோம். நாங்கள் விளையாட அழகிய மைதானம் அமைந்திருக்கின்றது. அது பச்சை பசேலென்ற அழகான மைதானம் ஆகும். 

அழகான முறையில் கட்டங்கள் வடிவமைக்கப்பட்டு காணப்படுகின்றன. அங்கே தான் எமது வகுப்பறை காணப்படுகின்றது. எமது வகுப்பறைகள் தூய்மையாகவும் அழகாகவும் காட்சி தரும். காலையில் பாடசாலைக்கு சென்று அங்கே அமருகின்ற போது அந்த மகிழ்ச்சியை எம்மால் உணர முடியும். 

பின்பு நாங்கள் ஓய்வு நேரங்களில் சென்று பார்க்க அழகான பூங்கா ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. நேரம் கிடைக்கின்ற போதெல்லாம் அங்கே சென்று நண்பர்களோடு உரையாடுவோம். 

மற்றும் காலை பிரார்த்தனை செய்வதற்கெனவே அழகான வழிபாட்டு மண்டபம் மற்றும் ஒரு ஆலயம் எமது பாடசாலை வளாகத்தினுள்ளேயே அமைக்கப்பட்டிருக்கின்றது. மற்றும் நாம் சென்று நல்ல புத்தகங்களை வாசிக்கவென அழகான ஒரு நூலகம் அமைக்கப்பட்டிருக்கின்றது. 

விஞ்ஞான ஆய்வு கூடம், தகவல் தொழில்நுட்பகூடம் என எல்லா வசதிகளும் நிறைந்த ஒரு அழகான பாடசாலையாக எனது பாடசாலை விளங்குகிறது. 

எனது பாடசாலைக்கு செல்லும் வீதியின் இருமருங்கிலும் அழகான மரங்கள் நேராக நடப்பட்டிருப்பதனை பார்க்க மிகவும் அழகாய் இருக்கும் இவ்வாறு எனது பாடசாலையினுடைய அழகை சொல்லி கொண்டே செல்லலாம் அது நீண்டு கொண்டே இருக்கும். 

ஆர். விஷாலினி, 
கொட்டகலை. 

Comments