சிறந்த பாடசாலை விநியோக வர்த்தக நாம விருதை சுவீகரித்தது அட்லஸ் | தினகரன் வாரமஞ்சரி

சிறந்த பாடசாலை விநியோக வர்த்தக நாம விருதை சுவீகரித்தது அட்லஸ்

இலங்கையின் முன்னணி காகிதாதிகள் வர்த்தக நாமமான அட்லஸ், மக்கள் மத்தியில் கொண்டுள்ள அபிமானத்தை மேலும் உறுதி செய்யும் வகையில், தொடர்ச்சியான மூன்றாவது தடவையாகவும் SLIM-Kantar மக்கள் விருதுகள் 2022 (SLIM-Kantar People’s Awards 2022) இல் ஆண்டின் சிறந்த பாடசாலை விநியோக வர்த்தக நாமம் 2022எனும் விருதை தனதாக்கியிருந்தது. பயிலலில் அதிகளவு கவனம் செலுத்தியிருந்த, சமமான கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருந்தமைக்கு அங்கீகாரமாக வென்ற இந்த விருதை அட்லஸ் அக்சிலியா கம்பனி லிமிடெட் முகாமைத்துவ பணிப்பாளர் அசித சமரவீர பெற்றுக் கொண்டார். இந்த விருதைப் பெற்றுக் கொள்ளும் போது, சந்தைப்படுத்தல் பணிப்பாளர் கௌஷாலி குசுமபால மற்றும் விற்பனை பணிப்பாளர் இந்திரஜித் பிந்துஹேவா ஆகியோருடன் அட்லஸ் அணியினரும் காணப்பட்டனர். 2022மார்ச் 21ஆம் திகதி இடம்பெற்ற இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் இலங்கையின் சிறந்த 5 FMCG இளைஞர் அபிமான வர்த்தக நாமங்களில் ஒன்றாக, “2022ஆம் ஆண்டுக்கான இளைஞர் அபிமான FMCG வர்த்தக நாம விருது” என்பதற்கும் பிரேரிக்கப்பட்டிருந்தது.

மக்களின் குரலை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கும் ஒரே வர்த்தக நாமச் சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்வாக SLIM மக்கள் அபிமான விருதுகள் வழங்கும் நிகழ்வு அமைந்திருப்பதுடன், இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தினால் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகின்றது. இலங்கையில் தற்போது இயங்கும் உலகின் முன்னணி புகழ்பெற்ற ஆய்வு நிறுவனங்களில் ஒன்றாக Kantar LMRB இனால் நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்படும் ஆய்வின் பெறுபேறுகளின் அடிப்படையில் வெற்றியாளர்களைத் தெரிவு செய்கின்றது. இலங்கையர்களுக்கு மிகவும் நெருக்கமான மற்றும் அபிமானம் வென்ற வர்த்தக நாமங்கள், நபர்கள், நிறுவனங்கள் போன்றவற்றை கருத்தாய்வின் மூலம் தெரிவு செய்து மக்கள் அபிமான விருது வழங்கப்படுகின்றது.

இலங்கையில் பயிலல் கட்டமைப்புக்கு உரிய தீர்வுகளை பொருத்தமாக வழங்கக்கூடிய வகையில் நிறுவனத்தின் பங்காளர் ஈடுபாட்டுடனான பயிலல் இடையீடுகள் அமைந்துள்ளன.

Comments