உயிர்ப்பாக செயற்படும் குடிமக்கள் சமூக நடவடிக்கை திருமலையில் நிறைவு | தினகரன் வாரமஞ்சரி

உயிர்ப்பாக செயற்படும் குடிமக்கள் சமூக நடவடிக்கை திருமலையில் நிறைவு

Muslim Aid உடன் இணைந்து இலங்கை British Council, திருகோணமலை மாவட்டத்தில் காலநிலை மாற்றம் தொடர்பில் உயிர்ப்பாக செயற்படும் குடிமக்கள் எனும் முயற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த ஒட்டுமொத்த திட்டமும், தற்போது உலக மக்களைப் பாதிக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றான காலநிலை மாற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இளைஞர்களை அணிதிரட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஆறு தனித்துவமான திட்டங்களை உள்ளடக்கியதாகும்.

'உயிர்ப்பாக செயற்படும் குடிமக்கள்' முயற்சியின் கீழான ஆறு திட்டங்கள்: கிண்ணியா காலநிலை மீளெழுச்சி, பாரிஜாதம், மூதூர் பாதுகாவலர்கள், Tiny Tide, வைர மாதிரிக் கிராமம், கண்டல் தாவரங்கள் (Kinniya Climate Resilience, Parijatham, Muthur Guardians, Tiny Tide, Diamond Model Village and Man Grow)

கிண்ணியா காலநிலை மீளெழுச்சித் திட்டமானது, காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் திருகோணமலை இளைஞர்கள் மத்தியில் சமூகத் தலைமைத்துவத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டதாகும். அந்த வகையில், கிண்ணியா அல் இர்பான் மகா வித்தியாலய சிரேஷ்ட மாணவர்களை இலக்காகக் கொண்ட, காலநிலை மாற்றம் மற்றும் மீளெழுச்சி தொடர்பான முக்கியமான பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் ஒரு நாள் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பொற்கேணி கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட பாரிஜாதம் திட்டமானது, வறுமை ஒழிப்பு மற்றும் சூழல் மாற்றத்தை மையமாகக் கொண்டிருந்தது.

Comments