கொரோனா | தினகரன் வாரமஞ்சரி

கொரோனா

கொரோனா என்றாலே அனைவரும் பீதியடையும் செய்தியாகி விட்டது. உலக மக்களை ஆட்டிப்படைக்கும் 'கொவிட் 19' எனும் கொடிய கண்ணுக்குப் புலப்படாத சிறிய வைரஸ் கிருமி மனிதரை மரணத்துக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கிறது.

சீனாவின் வூஹான் மாநிலத்தில் முதன் முதலில் பரவிய கொடிய வைரஸ் நோயால் உலக நாடுகள் அனைத்தும் சொல்லொனா துன்பத்திற்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கிறது.

ஏழை, பணக்காரன் என்ற பேதமின்றி அனைத்து தரப்பினரையும் விட்டுவைக்கவில்லை இந்த கொடிய வைரஸ். இந்த கொரோனா நோயிலிருந்து உலக மக்களை காப்பதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் சுகாதார அமைச்சு, மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தவிர, ரஷ்யா, சீனா, அமெரிக்கா என உலக நாடுகள் பல வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி மருந்துகளை கண்டு பிடித்து விநியோகித்து வருகின்றன.

எனவே உலக மக்களாகிய நாம் வைத்தியர்களின் ஆலோசனைகளுக்கமைய செயற்படுவோம். அத்துடன் சமூக இடை வெளியைப் பேணுவது மற்றும் முகக்கவசம் அணிவது. கைகளை நன்றாக கழுவுவது செனிட்டைசரைப் பாவிப்பதையும் வழக்கமாகக் கொள்வோம். இவ்வாறு செயற்படுவோமானால் கொரோனா வைரஸிடமிருந்து எம்மை நாம் பாதுகாத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

புகழேந்திரன் ரக்‌ஷனா,
மட்/அருணோதயா வித்தியாலயம்,
மட்டக்களப்பு.

Comments