உள்நாட்டு Drifting ஆர்வலர்களுக்கு 'சிறகுகள்' வழங்கும் Red Bull | தினகரன் வாரமஞ்சரி

உள்நாட்டு Drifting ஆர்வலர்களுக்கு 'சிறகுகள்' வழங்கும் Red Bull

இலங்கையின் முதலாவது Red Bull Car Park Drift Clinic மூலம் உள்ளூர் டிரிஃப்டிங் ஆர்வலர்களுக்கு மறக்கமுடியாத அனுபவத்தை Red bullவழங்கியிருந்தது. கடந்தநவம்பர் 27ஆம் திகதி நடைபெற்ற இந்நிகழ்வானது இலங்கையில் நடைபெற்ற இவ்வகையிலான முதலாவது நிகழ்வாகும். இதில் 35 சாரதிகள்பங்குபற்றியதுடன், லெபனான்நாட்டுசம்பியன்சாரதியான Abdo Feghali இனால் நடாத்தப்பட்டதுறையின் முன்னணி drifting நிகழ்வாகும்.

சுகாதார வழிகாட்டல்களையும் பேணியவாறு, இலங்கையில் முதன்முறையாக இந்நிகழ்வை நடாத்துவது சவாலானதாகஇருந்தது. ஆயினும், அதனையும் தாண்டி, கொவிட் தொற்று நோயின் பின்னணியில் இவ்வாறான பொது நிகழ்வைநடத்துவதிலானசவால்கள்இருந்தபோதிலும், இலங்கையில் டிரிப்டிங் பிரபலமடைவதற்கு ஊக்கமளிப்பதற்கும், உள்ளூர் சாரதிகளுக்கு சிறகுகள் (Wings) வழங்குவதில் Red Bull இன் அர்ப்பணிப்பு உண்மையான ஒருசான்றாகவும் இருந்தது. எதிர்காலத்தில் ஒருநாள் உலகசம்பியன்ஷிப் இறுதி இப் போட்டியை நடத்தும்நாடாக இலங்கைமாறும் திறனைப் பிரதிபலிப்பதாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.

Red Bull Car Park Drift என்பது Red Bull நிகழ்வு நாட்காட்டியில் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வாகும். பந்தய ஆர்வலர்கள் மற்றும் சாரதிகள் மத்தியில் மட்டுமல்லாமல் பார்வையாளர்கள் மத்தியிலும் இந்த விளையாட்டுமிகுந்தஆர்வத்தைஏற்படுத்தியிருந்தது. இலங்கையில் முதன் முறையாக இந்தநிகழ்வுஇடம்பெறுவதால், இரு மடங்கு சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. காரணம், சம்பியனான டிரிப்டர் அப்டோபெகாலியிடம் இருந்து இலங்கை ட்ரைப்டர் சாரதிகள் தங்கள் திறமையை சோதித்துப்பார்க்கவும், அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவும் வாய்ப்பை பெறக்கூடியதாகவும்இருந்தது. 1998 இல் தனது பந்தய வாழ்க்கையைத் தொடங்கிய அப்டோ பெகாலி, ஒருலெபனான் ரெலி சாரதி என்பதுடன் 3 முறை தேசிய சம்பியன் பட்டத்தையும் பெற்றவராவார்.

டிரிப்டிங்கின் மீதான அவரது ஆர்வம் அவரது திறமையை வளர்த்துக்கொள்ளவும், ஒருடிரிப்டிங் வீரராகவும் மாற்றியது. 2008ஆம் ஆண்டில் லெபனான் முதன் முதலில் Red Bull Car Park Drift நிகழ்வை நடத்தியது. இதுவாய்ப்பின்றி காணப்பட்டஅனைத்து Drift வீரர்களுக்கும்தங்கள் திறமைகளை சோதிக்கவும், தங்கள் மீது கவனத்தை ஈர்க்கச்செய்யவும் முடிந்ததுடன், அப்டோபெகாலியை ஒருஜாம்பவானாகவும் ஆக்கியது. அவர் 2012 இல் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் மிகநீண்ட Drifting இற்கான கின்னஸ் உலக சாதனையை முறியடித்தார் என்பதுடன், 2013 இல் ஒட்டுமொத்த லெபனான் ரெலி சாம்பியன்ஷிப்பை வென்றார்.

Comments