ஆர்ப்பாட்டங்கள், கையெழுத்து நாடகங்கள் | தினகரன் வாரமஞ்சரி

ஆர்ப்பாட்டங்கள், கையெழுத்து நாடகங்கள்

திடீரென முளைத்தெழுந்த காரணமென்ன?

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும் என்று தமிழ் அரசியல் கட்சிகளால் கொழும்பிலும், அதைத் தொடர்ந்து வடக்கிலும் பொதுமக்களிடமிருந்து கையெழுத்து பெற்றுக் கொள்ளும் வேட்டை நடைபெற்று வருகின்றது. அதற்கும் அப்பால் நாட்டின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை தமிழ்க் கட்சிகள் பலவும் தமிழ் பேசும் இனத்தின் ஏனைய கட்சியினரையும் இணைத்துக் கொண்டு முன்னெடுத்து வருகின்ற செயற்பாட்டையும் அவதானிக்க முடிகிறது.

இந்த வேளையில் ஏன் இந்த திடீர் ஆர்ப்பாட்டங்களும் கையெழுத்து வேட்டையும் என்று ஆராய்ந்து பார்த்தால், எதிர்வரும் மார்ச் ஆரம்பமாக இருக்கின்ற மனித உரிமைகள் தொடர்பான மாநாட்டுக்கு வலுச்சேர்க்கும் மறைமுக நடவடிக்கையே என்பது சகலருக்கும் தெரியும்.

யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களை எட்டி நிற்கும் இன்றைய காலப் பகுதியில், யுத்தகாலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற மனித உரிமை மீறல் சம்பவங்களை இன்றும் ஞாபகப்படுத்தி அதற்காக குரல் கொடுத்து வருகின்ற அமைப்புகளை மற்றும் அரசியல் கட்சிகளை உண்மையில் பாராட்டத்தான் வேண்டும்.

ஆனால் இந்த செயற்பாடுகள் உண்மையில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்படுகின்றனவா என்று உற்றுநோக்கினால் நிச்சயமாக அதனை இல்லை என்றே

Comments