வைரத்தின் வரலாறு | தினகரன் வாரமஞ்சரி

வைரத்தின் வரலாறு

ந்த உலகில் வைரங்கள் பல லட்சக்கணக்கான வருடங்களாக உருவாகி வருகின்றன. அவற்றில் சில தம் பிரகாசத்தால் நம் கண்களை கவர்ந்து வியப்பில் ஆழ்த்துகின்றன. அவை செழிப்பு மற்றும் ஆடம்பரத்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றன. பண்டைய காலங்களில், அவை நன்மையளிக்கக் கூடியவையாகக் கருதப்பட்டன. அவற்றின் பயன்பாடு பலம் தரும் என்று கூறப்படுகிறது. இது எதிரிகள், தீமைகள் மற்றும் கெட்ட கனவுகளிலிருந்து பாதுகாப்பதாகவும் நம்பப்படுகிறது.  

பண்டைய கிரேக்க பாரம்பரியத்தில் வைரம் மிகச் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. கிரேக்கர்கள் அவற்றை கடவுளின் கண்ணீர் என்றும் விண்ணிலிருந்து விழுந்த நட்சத்திரங்களின் துண்டுகள் என்றும் கருதினர்.  

வைரங்கள் உருவாகக் காரணமாக இருக்கும் தனிமமான கார்பன் உயிர்களின் அடிப்படையாகும். வைரங்கள் மிகக் கடினமான சூழலில் தான் வலிமை பெறுகின்றன. அவை உருவாகும் சூழலில் கடுமையான அழுத்தத்தைத் தாங்கும் திறன் கொண்டவை. ஹைட்ரஜன் மற்றும் வெப்பநிலையின் சரியான கலவை இருந்தால், அது கார்பன் டை ஒக்சைடாகவும் பறந்துவிடும்.  

வைரங்கள் தனிப் பிரகாசமாகவும் பளபளப்பாகவும் இருக்கும். ஆனால் இது மிகவும் கடினமானது. அவை சிறந்த வெப்ப கடத்திகள். வெப்பநிலை காரணமாக அவற்றின் உருவ அளவும் மிகச் சிறியதாகிறது. இது கார மற்றும் அமில இரசாயனங்களால் இது பாதிப்படைவதில்லை. ஆழமான புற ஊதா கதிர்கள் காரணமாக, அது கண்ணாடி போல் ஆகிறது. எதிர்மறை எலக்ட்ரோநெக்டிவிட்டி கொண்ட சில அறியப்பட்ட பொருட்களில் இதுவும் ஒன்றாகும்.  

நமது உலகில் உள்ள பெரும்பாலான வைரங்கள் பூமிக்கு அடியில் 150கிலோமீட்டர் ஆழத்தில் உருவாகின்றன. அல்லது விண்கற்களின் தாக்கத்தால் உருவாகின்றன.  

வைரங்கள் மிக அதிக வெடிப்புத் தன்மையுடன் தான் பூமியின் மேற்பரப்புக்கு வருகின்றன. வரலாற்றில் இதுவரை உருவான மிகப்பெரிய வெடிப்பில் உருவானவை இந்த வைரங்கள். இந்த வெடிப்புகளால் உருவாக்கப்பட்ட சில எரிமலைகளின் அடித்தளம் பூமியில் மிக ஆழமாகச் சென்றுள்ளன.  

அனைத்து வைரங்களும் கண்ணாடி போன்றவை அல்ல. சில வெளிர் மஞ்சள் நிறத்திலும் சில பழுப்பு நிறத்திலும் இருக்கும்.     சில வைரங்கள் பல வண்ணங்களிலும் உள்ளன. அவை மிக அரிதானவை. சிவப்பு, நீலம் மற்றும் பச்சை நிற வைரங்கள் மிக அரிதானவை. ஆரஞ்சு, மஞ்சள் மற்றும் சற்று மஞ்சள் கலந்த பச்சை வைரங்கள் மிகவும் எளிதில் காணப்படுகின்றன.  

எம். மனோரஞ்சனி,  
தரம் 10s,  
ஸ்ரீகதிரேசன் மத்திய மகா வித்தியாலயம்,  
நாவலப்பிட்டி.

Comments