பிரபாசுக்கு ஜோடியாகும் கரீனா கபூர்? | தினகரன் வாரமஞ்சரி

பிரபாசுக்கு ஜோடியாகும் கரீனா கபூர்?

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ், அடுத்ததாக நடிக்க உள்ள படம் 8 மொழிகளில் தயாராக உள்ளது.

பிரபாஸ், கரீனா கபூர் ‘ராதே ஷ்யாம்’, ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ என அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களில் நடித்து வரும் பிரபாஸ், சமீபத்தில் தனது 25-வது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி அப்படத்திற்கு ‘ஸ்பிரிட்’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும், அர்ஜுன் ரெட்டி பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்க உள்ளதாகவும் அறிவித்திருந்தனர். மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உட்பட 8 மொழிகளில் தயாராவதாக குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில், ஸ்பிரிட் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கப்போது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் ஸ்பிரிட் படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் நடிகை கரீனா கபூர் பிரபாஸுடன் முதன்முறையாக கூட்டணி அமைக்க உள்ளார். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Comments