ஹிஷாலினியுடன் முடியுமா இல்லை இன்னும் தொடருமா? | தினகரன் வாரமஞ்சரி

ஹிஷாலினியுடன் முடியுமா இல்லை இன்னும் தொடருமா?

யாழில் பாரிய ஆர்ப்பாட்டம்

பெண்கள் மற்றும் சிறார்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். மத்திய பஸ் தரிப்பிடத்தின் பல அமைப்புக்களின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.யாழ் மாவட்ட அரசியல்வாதிகளான மாவை சேனாதிராஜா, ஶ்ரீதரன், அனந்தி சசிதரன், உமா சந்திர பிரகாஷ் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துக் கொண்டிருந்தனர்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாற்றிய 16 வயதான சிறுமி ஹிஷாலினி, பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஹிசாலினியின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை இந்த போராட்டங்கள் தொடரும் என்றும், ஹிசாலியினியின் மரணம் தொடர்பாக நீதியான விசாரணை நடாத்துமாறும் கேட்டுக்கொண்டதுடன், சிறுவர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது தொடர்பாக அரசாங்கம் கடுமையான சட்டங்களை இயற்றி, அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

Comments