எனக்கே எனக்காய் | தினகரன் வாரமஞ்சரி

எனக்கே எனக்காய்

துளைகளற்ற ஒரு 
புல்லாங்குழலாய் நின்று  
ஏகாந்த இனிமைக்கு  
ஒலியெழுப்பக் காத்திருக்கிறேன் 
ஏமாற்றப்பட்ட நெஞ்சங்களுக்காய் 
மறக்கவோ மறைக்கவோ  
முடியாத சில மனவேதனைகளை 
நான் எதிர்கொள்ளும்  
தடைகளில் காண்கிறேன் 
என் அறிவுக்கெட்டிய  
அனைத்து விடயங்களிலும் 
எனக்கான படிப்பினைகளையே 
நான் கண்டுகொண்டேன் 
பக்கசார்பற்ற உண்மையான  
அன்பைத் தேடி அலைந்தலைந்து 
மாறாத ரணங்களின் வடுக்கள்  
மீண்டும் மீண்டுமாய் 
என் மனத்தில் 
இடர்வதும் இடர் வருவதும்  
வாழ்க்கையில் தான் என்பதை 
நரம்புகள் நறுக்கப்பட்ட  
ஒரு வீணையாய்  
நின்றுணர்கிறேன் 
காயப்பட்டு மனவேதனையில்  
இருக்கும் போது  
ஓலமிட்டு அழுகிறேன் 
ஆத்ம திருப்திக்காய்

றஸ்மினா றாஸிக்  
குருநாகல் 

Comments