பூனை குட்டிகளை விரும்பும் அமலாபால் | தினகரன் வாரமஞ்சரி

பூனை குட்டிகளை விரும்பும் அமலாபால்

நடிகை அமலாபால் சமீபத்தில் “எனக்கு ஆன்மிக உணர்வு ஏற்பட்டு இருக்கிறது. தான் என்ற அகந்தை மறைந்துவிட்டது.

எனக்குள் இருக்கிற குண்டலினி சக்தியை எழுப்ப வாய்ப்பு கொடுத்து இருக்கிறேன்” என்றார்.

மேலும் ‘’உள்மனதை கற்றுக்கொள்ள எனது 19-வது வயதில் முதல் முதலாக ஈஷா யோகா மையத்துக்கு சென்றேன். அப்போது சத்குருவிடம் 3 கேள்விகள் கேட்டேன். அதற்கான விடைகள் யோகா பயிற்சியில் இருக்கிறது என்றார். இப்போது எனது வாழ்க்கை முழு வட்டத்துக்குள் வந்து விட்டது’’ என்றும் கூறினார்.

அந்தரத்தில் துணியை கட்டி தலைகீழாக தொங்கி யோகா பயிற்சி செய்யும் புதிய வீடியோவையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். இந்த நிலையில் பூனைக்குட்டிகளுடன் விளையாடும் புகைப்படங்களை அமலாபால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பூனை குட்டிகள் தனக்கு பிடித்தமானவை என்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.

ஆன்மிகம், தியானம், யோகா, பூனைகளுடன் விளையாட்டு என்று வாழ்க்கையை அமலாபால் மகிழ்ச்சியாக நகர்த்தி வருகிறார்.

Comments