இதுவரை மொத்தம் 2,011 பேர் உயிரிழப்பு; கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 101 பேர் பலி | தினகரன் வாரமஞ்சரி

இதுவரை மொத்தம் 2,011 பேர் உயிரிழப்பு; கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 101 பேர் பலி

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இலங்கையில் 2,011 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் மேலும் 101 உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளமை நேற்று முன்தினம் (11)   உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஒரே நாளில் அதிகளவான கொவிட்-19 தொற்று உயிரிழப்புகள் உறுதிசெய்யப்பட்டுள்ளமை இதுவே முதல் முறையாகும்.

இதேவேளை நேற்று (11) 2,738 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 216,134 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்தோடு கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்த 1,811 நபர்கள் வைத்தியசாலையிலிருந்து நேற்றைய தினம் வெளியேற்றப்பட்டுள்ளமையினால் குணமடைந்தோரின் மொத்த தொகை 182,238 ஆக அதிகரித்துள்ளது.

தற்சமயம் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 31,885 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதுடன், சந்தேகத்தில் 1,300 நபர்கள் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.

Comments