ரிஷாத் MPக்கு கேரளாவுடன் உள்ள தொடர்புகள் என்ன? | தினகரன் வாரமஞ்சரி

ரிஷாத் MPக்கு கேரளாவுடன் உள்ள தொடர்புகள் என்ன?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனுக்கும் கேரளாவிற்குமிடையிலான தொடர்புகள் குறித்து கேரள பொலிஸாரும் இந்திய புலனாய்வு பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து வெளிவரும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் இதனை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் மேலும் தெரிவித்துள்ளதாவது

கேரளாவுடன் முன்னாள் அமைச்சருக்குள்ள தொடர்புகள் தொடர்பில் குறிப்பிடத்தக்க விபரங்கள் எவையும் இன்னமும் கிடைக்காத போதிலும் 2009 இல் அவர் கேரளாவிற்கு Kasaragod ஏன் விஜயம் மேற்கொண்டாரென்பது குறித்தும் கேரளாவின் மதத் தலைவர்கள் சிலருடன் அவருக்குள்ள தொடர்புகள் குறித்து விசாரணைகள் நடைபெறவுள்ளன.

கேரளாவின் மதத் தலைவர்கள் சிலர் இலங்கையில் ரிசாத் பதியுதீனை சந்தித்துள்ளதுடன் 2013 இல் சென்னைக்கு விஜயம் மேற்கொண்டவேளை அவர் குறிப்பிட்ட மதத் தலைவர்களையும் சந்தித்துள்ளார்.

ரிசாத் பதியுதீனின் தந்தை Padna in Kasaragod என்ற பகுதியை பூர்வீகமாக கொண்டவரென தெரிவித்துள்ள புலனாய்வு அதிகாரிகள், அவர் அந்த பகுதியிலுள்ள சிலருடன் தொடர்பிலிருந்தாரெனவும் தெரிவித்துள்ளனர்.

புலனாய்வுப் பணியகமும் தேசிய விசாரணை முகவர் அமைப்பும் ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திற்கு இது தொடர்பான விசாரணைகளில் ஒத்துழைப்பை வழங்கியுள்ளன.

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதி சஹ்ரான் ஹாசிமுடன் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பை பேணிய தமிழ்நாட்டை சேர்ந்த ஐ.எஸ் ஆதரவாளர் ஒருவரை 2019 ஜூன் மாதம் தேசிய புலனாய்வு முகவர் அமைப்பை சேர்ந்தவர்கள் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கையின் அரசியல்வாதிக்கும் கேரளாவிற்குமிடையிலான தொடர்புகள் குறித்து வெளியான தகவல்களை உறுதிசெய்வதற்காக கேரள பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்வார்களென மாநிலத்தின் தலைமை பொலிஸ் அதிகாரி லோக்னாத் பெகேரா தெரிவித்துள்ளார். கேரளாவின் Padna பகுதியிலிருந்து 2016 இல் ஐ.எஸ் அமைப்புடன் இணைவதற்காக சிரியா சென்ற ஐந்து பேர் இந்த விசாரணைகளின் போது அவர்களில் சிலர் இலங்கையின் தேசிய தவ்ஹீத் ஜமாத்திடம் சென்றுள்ளமையும் அவர்கள் அங்கு மத பயிற்சி பெற்ற பின்னர் சிரியாவிற்கு சென்றுள்ளமையும் தெரியவந்ததென தெரிவித்துள்ள அதிகாரிகள் ரிசாத் பதியுதீனுக்குமுள்ள தொடர்புகள் குறித்து ஆழமான விசாரணை நடைபெறுமெனவும் தெரிவித்துள்ளனர்.

Comments