வவுனியாவில் ஊதுபத்தி விற்கும் சிறார்கள் | தினகரன் வாரமஞ்சரி

வவுனியாவில் ஊதுபத்தி விற்கும் சிறார்கள்

நாட்டில் சொந்தக்குடும்பத்துடன் வாழ முடியாத ஏழை முதியவர்களுக்கு இருக்கும் ஒரே வழி முதியோர் இல்லங்கள். ஆனால் அப்படியான முதியோர் இல்லங்களில் இடம் கிடைப்பதே இன்றைக்கு குதிரைக்கொம்பாக மாறியிருக்கிறது. முதியோருக்கு குடும்பத்தவருடன் வாழவே விருப்பம். ஆனால் குடும்பத்தவர்களுக்கு அதில் விருப்பமில்லை என்பது யதார்த்தம் ஆனால் பெற்றோர்களை பலரும் கவனிக்காமல் விடுவதால் மனம் உறுத்தும் நிலையில் பலர் முதியோர் இல்லங்களுக்கும் யாசகத்துக்கும் செல்கின்றனர். இதில் போய்ச் சேரும் முதியோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது மட்டுமல்ல, அதற்கான காரணங்களும் அதிகரித்துவருகின்றன. ஏழைக் குடும்பங்களில் குழந்தைகளின் கல்வி, உணவு, வீட்டு வாடகை மற்றும் மருத்துவ செலவுக்கே குடும்ப வருமானம் போதாது என்னும்போது வீட்டில் இருக்கும் முதியவர் தேவையற்ற சுமையாக பார்க்கப்படுவதும் நடத்தப்படுவதும் இயல்பாகி வருகிறது. இத்தகைய ஒதுக்குதலை, அவமானத்தை தாங்க முடியாத முதியவர்கள் இலவச முதியோர் இல்லங்களையும் யாசகங்களையும் நாடிச் செல்கின்றனர் இன்று யாரும் அற்ற அனாதைகளாக வறுமையால் வாடுபவர்கள், வயோதிபர்கள், உழைத்து வாழ முடியாதோர் சிறுவர்கள் கட்டாயமாக யாசகம் செய்ய வற்புறுத்தப்படுகின்றனர். இவ்வாறானவர்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமானதாக மாறியுள்ளது. கொவிட்-19 இன் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்து யாசகத்தில் ஈடுபடுகின்றனர். வீதிகளில் ஊதுபத்தி விற்கும் சிறுவர்கள் குறிப்பாக வாரத்தில் செவ்வாய் , வெள்ளி ஆகிய இரு தினங்களும் யாசகர்கள் வர்த்தக நிலையங்கள் , வீடுகளுக்கு சென்று யாசகத்தில் ஈடுபடுகின்றார்கள்

இவர்கள் ஊடாகவும் கொவிட்-19 தொற்று ஏற்படும் அபாய நிலை ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. எனவே யாசகர்களை வர்த்தக நிலையம் , வீடடு வளாகத்தினுள் உள்வாங்குவதை தவிர்த்து கொள்வதுடன்,தேவையேற்படின் முழுமையான பாதுகாப்புடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அவர்களுடான கலந்துரையாடி பணம் வழங்குதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்

இவர்கள் எதன் காரணமாக வீதிக்கு வந்துள்ளனர். அதுவும் தற்போதைய நிலைமையில் இவ்வாறானவர்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமானதாக மாறியுள்ளது.

பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெரும் எண்ணிக்கையான வயோதிபர்கள் வீதியோரங்களில் படுத்துறங்குவதுடன் பிறர் கொடுப்பதை வாங்கி உண்டு வாழ்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி பல சிறுவர்கள் பிரதான வீதியோரத்தில் அனல் பறக்கும் வெயிலில் நின்றுகொண்டு, ஒருசான் வயிற்று பசியை போக்குவதற்காக வீதியில் செல்கின்ற உறவுகளிடம் கையேந்தி நிற்பதை பார்த்த அந்த நிமிடமே மனம் சுக்கு நூறாகி விடுகின்றது. முடியவில்லை கண்கள் தினமும் கலங்கின்றது வேதனையில். இந்த பிஞ்சு உள்ளங்கள் கல்வி கற்கின்ற வயதில் இப்படி தெருவில் நின்று கையேந்துவதும், ஊதுபத்திகளை விற்பதை பார்க்கவும் வேதனையாகவுள்ளது வவுனியா மாவட்டத்தில் சிறுவர் பெண்கள் பாலியல் துஸ்பிரயோகத்தின் தாக்கம் அதிகரித்து செல்கின்றது. இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள், நாட்டின் கண்கள், எதிர்காலத்தின் தூண்கள் என்றெல்லாம் போற்றிக் கொண்டிருக்கும் அதேவேளை மறு பக்கம் சிறுவர் துஷ்பிரயோகக் கலாசாரம் பூதாகரமாக வளர்ச்சியடைந்து நாளைய தலைவர்களை இன்றே நாசம் பண்ணிவிடுவார்களோ என்ற அச்சம் ஆக்கிரமித்துள்ளது. காமவெறி பிடித்த அரக்கர்களின் உடற் பசிக்கு எமது சின்னஞ்சிறு மொட்டுக்கள் பலியாவதை நினைக்கும் போது நல்ல இரத்தம் ஓடும் எந்தவொரு மனமும் பதறாமல் இருக்காது. உலகமறியாத பிஞ்சு உள்ளங்களிடம் தமது இச்சைகளைத் தீர்க்க முற்படுகிறவர்கள் நிச்சயமாக மனித இனத்தைச் சார்ந்தவர்களாக இருக்கமாட்டார்கள். அவர்கள் அரக்க குணம் படைத்தவர்களாகவே இருப்பார்கள்.

சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதற்கான காரணம் என்ன வென்று சற்று அவதானித்தால் பாதுகாப்பின்மை, பெற்றோரின் கவனக்குறைவு, பொருளாதாரப் பலவீனம், சிறுவர்களின் அறியாமை, பெற்றோரின் விவாகரத்து, பெற்றோர் வெளிநாட்டுக்கு செல்லுதல் என அடுக்கலாம். அதிலும் வடமாணத்தில் வவுனியா மாவட்டத்தில் 2020 ஆண்டு வவுனியா பிரதேச செயலகத்தில் 40 துஷ்பிரயோகமும் வவுனியா தெற்கில் 9ம்.வெங்கலச்செட்டிக்குளத்தில் 46ம் வவுனியா வடக்கில் 61 ஆக வவுனியா மாவட்டத்தில் மொத்தம்146 சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் யோ.யெக்கெனடி தெரிவித்துள்ளார்

நீங்கள் நாளாந்தம் சந்திக்கும் பிச்சைக்காரரிடம் ஒரு விடயத்தை அவதானித்திருப்பீர்கள். அதாவது அவர்களின் நோயோ, உடலில் ஏற்பட்ட காயங்களோ அல்லது புண்களோ என்றும் மாறுவதில்லை. அப்படியே இருக்கும். காரணம்?இவ்வாறான சூழ்நிலையில் , இவர்கள் பலரின் இன்னொறு பக்கத்தை பார்த்தால் ஆறாத காயமும் தீராத நோயுமாக பிச்சைக்காரர்களுக்கு அப்பாற்பட்டு, “நோயினால் பீடிக்கப்பட்டிருக்கிறேன்” என ஒரு வைத்தியசாலை கடிதத்தைக் காட்டியும் அல்லது நோயினால் பீடிக்கப்பட்டதாகக் கூறி, ஒரு குழந்தையை வைத்துக் கொண்டும் பிச்சை எடுப்போராக இருப்பர்.

அதுதானே அவர்களின் மூலதனம். நோய் சரியாகி விட்டால், எதை காட்டிப் பிச்சை எடுப்பதாம்? ""பிச்சைகாரன் புண் போல "" என ஒரு மரபுத்தொடரும் உள்ளதே? பிச்சைக்காரர்களைப் பார்த்தால் ஒரு சில பயணிகளுக்கு உளரீதியான தாக்கங்களும் ஏற்படும். இதன் காரணமாக அவர்கள் உடனே பணத்தைக் கொடுத்து விடுவர்.

இதைவிட அதிர்ச்சி தரும் சம்பவமும் உள்ளது இலங்கை ரயில்வே திணைக்களம் ரயில்களில் பிச்சை எடுக்கத் தடை விதித்தமைக்குப் பின்னணியில் அதிர்ச்சி தரும் சம்பவங்கள் இருந்துள்ளன. உதாரணமாக

வவுனியா மாவட்டத்தில் 10 வயதுதொடக்கம் 15வயதுக்கு உட்பட்ட பல சிறுவர்கள் பிஞ்சு உள்ளங்கள் கல்வி கற்கின்ற வயதில் இப்படி தெருவில் நின்று கையேந்துவதையும் ஊதுபத்திகளை விற்பதையும் பார்த்த பொலிசாரும் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ஐயக்கெனடியும் இனணந்து சில நாட்களாகவே சந்தேகம். ஏற்பட்டதை அடுத்து “ இந்தச் சிறுவர்களை அதிகாரிகள் விசாரிக்க ஆரம்பித்தனர்.

முதலில் மௌனம் சாதித்த சிறுவர்கள் பிறகு கூறிய விடயங்கள் அதிர்ச்சி தந்தன.

சிறுவர்களையும் பெண்களையும் பிச்சைக்காரர்களையும் வைத்து வியாபாரம் செய்யும் ஒரு முதலாளி தான் தங்களை இங்கு ஊதுபத்தி விற்க அனுப்பியதாகவும் ஒவ்வொரு நாளும் அன்று தாங்கள் சம்பாதித்த பணத்தை அவருக்குக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் தங்களுக்கு சம்பளம் தருவதாகவும் அவர்கள் கூறினார்கள்

ஆகவே,இதைவிட வேறு பல சட்ட விரோத செயற்பாடுகளுக்கும் பிச்சைதான் இன்று துணை போகிறது. இந்தக் காரணங்களுக்காகவே மேற்குறிப்பிட்ட தடை அவசியமாகின்றதல்லவா? இதுமட்டுமில்லாமல் திருடர்களுக்கு வழிகாட்டிகளாகவும் செயல்படுகின்றார்கள் பஸ்களில் பணப்பை மற்றும் செல்லிடப்பேசிகளை களவாடும் திருடர்களுக்கு வழிகாட்டிகளாக இந்த பிச்சைக்காரர்கள் விளங்குவதாக பொலிஸார் கூறுகின்றனர்.

தனக்குத் தர்மம் செய்யும் நபர், அவரது பணப்பையைத் திறக்கும் போது, அவரை நன்றாக நோட்டமிடும் குறிப்பிட்ட பிச்சைக்காரர், குறிப்பிட்ட பஸ்ஸில் இருந்து இறங்கி, திருட்டையே முழு நேரத்தொழிலாகச் செய்யும் நபர்களிடம் பயணி பற்றிய தகவல்களைக் கூறி விடுவார்.

பிறகென்ன? ஓரிடத்தில் ஏறி மறு இடத்தில் இறங்கும் போது, பயணியின் பணப்பை அல்லது செல்லிடப்பேசி காணாமல் போயிருக்கும். தகவல் தந்ததற்கு ‘ஸ்பெஷல் கமிஷன்’ வேறு!

சிவகுமார் திவியா

Comments