தெங்கு செய்கையாளர்களுக்கு காப்புறுதி | தினகரன் வாரமஞ்சரி

தெங்கு செய்கையாளர்களுக்கு காப்புறுதி

இலங்கை தெங்கு உற்பத்தியாளர் சங்கம் மற்றும் செலின்கோ காப்புறுதி நிறுவனம் (சிஐசி) ஆகியவை இணைந்து தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் (சிடிஏ) வழிகாட்டுதலின் கீழ் இந்தத் துறைக்கான சிறப்பு காப்புறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. இதன் அறிமுக நிகழ்வு வெள்ளவத்தை சபையர் ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தெங்கு உற்பத்தியாளர் சங்கம் மற்றும் செலின்கோ காப்புறுதி நிறுவன ஆகியவற்றின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இலங்கையில் இவ்வாறான காப்புறுதி அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த விசேட காப்புறுதித் திட்டத்தின் கீழ், தென்னைச் செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு அவர்களின் விளைச்சலுக்கு பல்வேறு வழிகளிலும் ஏற்படும் சேதங்களுக்கு ஒரு நிலையான காப்புறுதித் தீர்வை வழங்க செலிங்கோ இன்சூரன்ஸ் முன்வந்துள்ளது.

இத்திட்டம் அதிகபட்ச தரமான அறுவடையை உறுதி செய்வதற்கும் அதன்மூலம் உள்ளுர் தேங்காய் உற்பத்தியாளரின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் இது உள்ளுர் விவசாயத் துறைக்கும் ஒரு வலுவான திருப்புமுனையாக அமையும் என்றும் சிலின்கோ காப்புறுதி நிறுவன உதவிப் பொது முகாமையாளர் தேசப்பிரியா விக்ரமரத்ன கூறினார்.

இப்புதிய திட்டத்தின் கீழ் தென்னை மரங்கள் சுூறாவளி, வறட்சி, புூச்சிகள், குரங்குகள் மற்றும் நோய்கள் போன்றவற்றின் தாக்கங்களின்போது காப்புறுதியைப் பெறும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். ஆரம்ப காப்புறுதிக் கட்டணமாக மரமொன்றுக்கு 60 ரூபாவும், மேலும் இழப்பீட்டுக்காக 1000 ரூபாவும் செலுத்த வேண்டும். இத்திட்டத்தின் கீழ் இழப்பீடு பெறும்போது செலின்கோ இன்ஷூரன்ஸ் ஒரு உத்தரவாதத்தையும் தருகின்றது. ”இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவன நிபுணர்களின் ஆலோசனைப்படி, இந்த காப்பீட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது, இது பொருத்தமான தொழில்நுட்ப அறிவை வழங்குகிறது, என்று செலின்கோ இன்சூரன்ஸ் கூட்டாண்மைக் கணக்குகள் சிரேஷ்ட முகாமையாளர் லியோனார்ட் சொலமன் கூறினார்.

இப்புதிய திட்டம் தென்னந் தோட்டக்காரர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் பெரும் ஊக்கமளிக்கும் என்று இலங்கை தெங்கு விவசாயிகள் சங்கத் தலைவர் ஜெயந்த சமரக்கோன் தெரிவித்தார்.

Comments