தமிழ், சிங்கள புத்தாண்டு கொடுப்பனவாக ரூ.5,000 | தினகரன் வாரமஞ்சரி

தமிழ், சிங்கள புத்தாண்டு கொடுப்பனவாக ரூ.5,000

கொவிட்19 தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகளின் குடும்பங்களுக்கு தமிழ், - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஆளுங்கட்சி உறுப்பினர்களின் வேண்டுகோளின் பேரில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அறிவுறுத்தலின் பிரகாரம் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில், வணிக அபிவிருத்தி மற்றும் பயன்பாடு குறைவான அரச வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். கிராம சேவகர் மட்டத்தில் அடையாளம் காணப்பட்ட குடும்பங்களுக்காக வழங்கப்படவுள்ள இக் கொடுப்பனவுகள் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பஸில் ராஜபக்ஷவின் தலையீட்டில் குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவை வழங்குவதற்காக ஏற்பாடுகள் சமுர்த்தி திணைக்களதுடன் ஒருங்கிணைந்த திட்டமாக செயல் படுத்தப்படவுள்ளது. தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக இக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Comments