உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நிதி வழங்கியவர் இப்ராஹீமே | தினகரன் வாரமஞ்சரி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நிதி வழங்கியவர் இப்ராஹீமே

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்காக இப்ராஹிம் மௌலவி என்பவரே நிதி உதவி வழங்கினார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

இப்ராஹிம் மௌலவி என்ற நபர் தற்போது குடும்பத்தினருடன் தடுத்துவைக்கப்பட்டுள்ளாரென அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்காக அந்த நபர் 50 மில்லியனை செலவிட்டுள்ளாரெனவும் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதி சஹ்ரான் ஹாசிம் மற்றும் அவரது சகாக்களிடம் 30 மில்லியன் மீட்கப்பட்டதென தெரிவித்துள்ள அமைச்சர் அந்த பணத்தை பயன்படுத்தி ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம் ஆனால் இஸ்லாமிய அரசை உருவாக்குவதற்காகவே இந்த நிதி பயன்படுத்தப்பட்டதெனவும் அமைச்சர் கூறியுள்ளார். எந்த நாடும் இந்த நிதியை வழங்கவில்லையென தெரிவித்துள்ள அவர், இப்ராஹிமின் இரு புதல்வர்கள் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்டனர்.

மகளும் தன்னை தானே தெமட்டகொடையில் வெடிக்கவைத்து க்ெகாண்டார் 

Comments