அழகிப் போட்டியில் கிரீடப் பிடிச்சண்டை | தினகரன் வாரமஞ்சரி

அழகிப் போட்டியில் கிரீடப் பிடிச்சண்டை

அழகு ராணிகளாவது சுலபமான காரியமல்ல. அதற்காக தமது வாழ்க்கையையே அர்ப்பணிக்க வேண்டும். முக்கியமாக பெரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். விருப்பமான உணவுகளை உண்ண முடியாது. கண்டபடி வெளியே வெயிலில் திரிய முடியாது.

சமைக்க முடியாது. நகங்கள் அசிங்கமாகும். விரல்கள் நிறமாற்றமடையும். திருமணத்திற்கு முன்னர் இவற்றை எப்படியாயினும் பராமரித்துக் கொள்ள முடியும். எனினும் தெற்காசியாவைச் சேர்ந்த நாடான இலங்கையில் குடும்ப கட்டமைப்பில் பெண்கள் மீது ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புக்கள் ஏராளமாகும். இது ஒரு குடும்பத்திற்கான உலக அங்கீகாரம் பெற்ற அளவுகோலாகும். அப்படியாயின் குடும்பத்தினுள் கணவன் மனைவியைப் போன்று பிள்ளைகளும் இருக்க வேண்டும். பிள்ளைகள் இல்லாமல் அது குடும்பமாக இருக்க முடியாது. விரிவான குடும்பத்தில் வயதான பெற்றோர்கள் இருக்க முடியும். எவ்வாறானதொரு குடும்பத்திலும் மனைவி மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புக்கள் ஏராளமானவை. அந்த பொறுப்புக்களையும் தாங்கிக் கொண்டு, வேலையும் செய்து கொண்டு, தமது வெளித் தோற்றத்தை முடியுமானளவுக்கு பராமரித்துக் கொண்டு ஆளுமையினை தக்க வைத்துக் கொள்ளும் பெண்கள் எமது நாட்டில் அனேகமானோர் உள்ளனர். இதனாலோ என்னவோ திருமணமான அழகிகள் கிரீடத்திற்காக பகிரங்க மேடையில் வைத்து சில தினங்களுக்கு முன்னர் நடாத்திய நாடகம் தற்போது அனேகமானோரின் பேசு பொருளாக ஆகிவிட்டிருக்கின்றது.

திருமதி அழகுராணியைத் தெரிவு செய்யும் போட்டியின் போதே இச்சம்பவம் இடம்பெற்றது. முதலாமிடத்தைப்பெற்ற வெற்றியாளர் மேடையில் பார்வையாளர்களை நோக்கிக் கையசைத்துக்ெகாண்டிருந்த போது மேடைக்கு வந்த இரு பெண்கள் அவளது தலையில் சூடப்பட்ட கிரீடத்தைக் கழற்றி இரண்டாம் இடத்தைப் பெற்ற போட்டியாளருக்கு அணிவித்தனர். வெற்றி பெற்ற அழகுராணி உடனடியாக மேடையிலிருந்து இறங்கிச் சென்றார். கிரீடத்தை மாத்திரம் பெற்றுக் கொண்ட இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட போட்டியாளர் மகிழ்ச்சியில் சிரித்துக் கொண்டிருந்தார்.

திருமதி அழகிகள் இவ்வாறு மேடையில் சண்டையிட்டுக் கொண்டாலும் உலகில் பெரும் பிரபலமாகியிருப்பது திருமணமாகாத பெண்களுக்கான அழகிப் போட்டியாகும். உலக அளவில் அவ்வாறிருந்த போதிலும் எமது நாட்டில் உலக அளவில் வெற்றிபெற்று புகழீட்டியவர்கள் திருமதி அழகிகள்தான். திருமதி அழகிகள்தான் இருவர் வெற்றிபெற்றிருக்கின்றார்கள். பெண்கள் சீக்கிரமாகவே திருமணம் செய்து கொண்டாலும் அவர்களது ஆசைக்கும், விருப்பத்திற்கும், திறமைக்கும் இடம் வழங்கி உலக அழகியாவது வரைக்கும் கொண்டு செல்வதற்கு எமது நாட்டு ஆண்கள் முற்போக்கானவர்கள்தான். இலங்கைப் பெண்களான நாம் இது தொடர்பில் பெருமை கொள்ள வேண்டியிருந்தாலும் இந்த அழகிப் போட்டிகளின் உள் விடயங்களை அறிந்திருப்பதால் அவ்வாறு பெருமை கொள்ள முடியாதுள்ளது.

எவ்வாறாயினும் மேலே குறிப்பிட்டதைப் போன்று திருமணமான பெண்கள் அழகிகளாக ஆவது இலகுவான காரியமல்ல. ஒரு தாயாக, மனைவியாக தமது வீட்டுப் பொறுப்புக்களை நிறைவேற்றும் பெண்கள் அழகு ராணிகளாக ஆவது முற்போக்கானதாகும். எனவே இங்கு மதிப்பீட்டிற்கு உள்ளாவது அவளது அழகு மாத்திரமல்ல என்பதனாலாகும். அவளது அர்ப்பணிப்பு, திறமைகள், பொறுமை, தாங்கிக் கொள்ளல், அன்பு, பாசம், இரக்கம் போன்றன மாத்திரமின்றி தாய்மையும் இங்கு மதிப்பீட்டுக்கு உள்ளாவதன் காரணத்தினாலாகும். மனைவி மற்றும் தாயாக தமது குடும்பத்தினுள் பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றும் பெண்கள் உண்மையில் தாய்க்குரிய பண்புகளைக் கொண்டவர்களாகும். அந்த தாய்க்குரிய பண்புகள் பிள்ளைகளுக்கு மாத்திரமின்றி, கணவரையும் கவனிப்பதாகும். இலங்கை குடும்பங்களில் தலைமை தாங்குபவள் தாயாகும். அனைத்தும் நடப்பது தாயைச் சுற்றியேயாகும். இல்லையெனில் சமையல் அறையைச் சுற்றியாகும். அவளது பொறுப்புக்கள் ஏராளமானவை. அவள் மேலதிக தொழில் செய்பவளாக இருந்தால் நிலைமை இன்னும் மோசமானதாகும்.

அவ்வாறான திருமணமான பெண்கள் அழகு ராணிகளாக கிரீடத்தைச் சூடிக் கொள்வார்களாயின் அது அவர்களுக்கு கிடைக்க வேண்டிய கிரீடமாகும். உண்மையிலேயே திருமணமான அழகு ராணி கிரீடம் அந்தளவுக்கு முக்கியமாவது என்பதனாலாகும்.

திருமதி உலக அழகி கிரீடத்தை இலங்கைக்கு முதலில் கொண்டு வந்த ரோஸி சேனாநாயக்கா அந்த கிரீடத்திற்கு உண்மையில் உரித்துடையவர். அவர் நாட்டில் பெரும் புகழைப் பெற்றதோடு, எல்லையற்ற பிரபலமும் கிடைத்தது. பெனடோலில் இருந்து வீட்டுக்கு அடிக்கும் பெயிண்ட் வரைக்கும் விளம்பரங்களில் ரோஸி இல்லாமல் இல்லை என்ற நிலை இருந்தது. ரோஸியின் வருகையுடன் திருமணமாகாத அழகு ராணிகளுக்கான எதிாபார்ப்புக்கள் தோன்ற ஆரம்பித்த போதும், அதற்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு, கரோலின் ஜூரி அழகு ராணிக்கான மகுடம் சூட்டிய வரை அந்த கனவு நனவாகவில்லை. கரோலின் கொண்டு வந்ததும் திருமணமான அழகு ராணி கிரீடமாகும். உலக அழகு ராணி கிரீடத்தைக் இலங்கைக்குக் கொண்டு வந்தாலும் கரோலின் ரோஸியைப் போன்று பிரபலம் ஆகியிருக்கவில்லை.

இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சில நேரம் தற்போது இலங்கையின் அழகு ராணிகளை விட வெளிநாட்டு அழகு ராணிகள் எமது நாட்டில் பிரபல்யம் அடைந்திருக்கின்றமை ஒரு காரணமாக இருக்கலாம்.

இப்போது இலங்கையில் அழகிப் போட்டிகள் பிரபலம் அடைவதில்லை. இதற்கு உண்மையான அழகிய யுவதிகள் உண்மையான திறமைமிக்க யுவதிகள் கலந்து கொள்கின்றார்களா என்ற கேள்வியும் எழுகின்றது. இப்போட்டிகள் இப்போது உண்மையிலேயே ஒரு மாபியாவாக ஆகியிருக்கின்றது. இத்துறைக்கு வரும் யுவதிகள் ஏதேனும் ஒரு துறையின் முக்கியஸ்தர் ஒருவரின் அடிமையாக இருக்க நேரிடுகின்றது. சுருக்கமாகச் சொல்லப் போனால் தற்போதிருப்பது இருப்பது அழகு ராணி புரடக்ஷன் ஹவுஸ் களாகும். அவ்வாறான புரடக்ஷன் ஹவுஸ் உரிமையாளர்கள் அழகு ராணிகளை முடித்துக் கொண்டிருக்கின்றார்கள். சந்திமால் ஜயசிங்கவும் அவ்வாறான தயாரிப்பு இல்லத்தின் ஒரு உரிமையாளராகும். அல்லது நாட்டின் பிரபலமான அழகு ராணிகளின் தயாரிப்பு இல்லத்தின் உரிமையாளராகும். அவர் செய்த எந்த வேலையும் தவறுவதில்லை. இங்கு நினைவு படுத்த வேண்டிய பல விடயங்கள் உள்ளன. அதில் இலங்கையின் இரண்டாவது உலக திருமதி அழகு ராணி கரோலின் ஜூரியும் சந்திமாலின் ஒரு தயாரிப்பு என்பதுதான். அதேபோன்று மேடையின் மீது சண்டையிட்டுக் கொண்ட இந்த திருமதி அழகு ராணியும் சந்திமாலின் ஒரு தயாரிப்பாகும். இப்போது நாம் அந்த சம்பவத்தைப் பார்ப்போம்.

இம்முறை இலங்கையின் திருமணமான அழகு ராணிக்கான கிரீடம் கிடைத்தது புஷ்பிக்கா த சில்வாவுக்காகும். மேடையில் வைத்து தலையிலிருந்த கிரீடம் கழற்றப்பட்டு அவமானப் படுத்தப்பட்டதும் அவரேயாகும். உண்மையில் சொல்லப் போனால் தற்போது புஷ்பிக்காவுக்கு கிடைத்திருப்பது, கிரீடம் கிடைப்பதை விடவும் மிகப்பிரமாண்டமான பிரபலமாகும். சாதாரண அழகு ராணிப் போட்டியான இந்த நிகழ்வு அவளுக்கு கிரீடம் சூட்டப்பட்டதோடு முடிவடைந்திருந்தால் இந்தளவுக்கு அவளுக்கு பிரமாண்டமான பிரபல்யம் கிடைத்திருக்காது. அது மாத்திரமல்ல, தற்போது சமூக ஊடகங்கள் ஊடாக புஷ்பிக்காவுக்கு கிடைத்திருக்கும் அனுதாபம் அதிகமானதாகும். அவளைச் சுற்றி மக்கள் கருத்துக்களும் எழுந்திருப்பது எதிர்காலத்தில் அரசியல் மேடையாக இருந்தாலும் சாதிக்க முடியுமானளவுக்காகும். அருகில் தேர்தல் ஒன்று நடக்குமாயின் புஷ்பிக்காவை நேராகவே பாராளுமன்றத்திற்கு அனுப்புமளவுக்கு எமது நாட்டு மக்கள் உணர்ச்சி வசப்படுபவர்கள் என்பதை எழுதாமல் இருக்க முடியாது.

மேடையில் வைத்து அவளது தலையில் சூட்டப்பட்டிருந்த கிரீடத்தைக் கழற்றி அப்புறப்படுத்தியது கரோலின் ஜூரியாகும். அவர் அவ்வாறு செய்வதற்கு முன்னர் அதற்கான காரணங்களைக் கூறினார். விழாவிற்கு வருகை தந்த பிரதம அதிதிகள் வெளியேறிச் சென்றதன் பின்னரே அதனை அவர் கூறியிருந்தார். நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு ஆயத்தமாக இருந்தது அப்படித்தான். கரோலின் ஜூரியின் காரணங்களுக்கு அமைய புஷ்பிக்கா விவாகரத்துப் பெற்றவர். அவர் திருமதி அழகுராணிப் போட்டிக்கு லாயக்கற்றவர் என்பதே. எனவே அவருக்கு திருமணமானவர்களுக்கான அழகு ராணி கிரீடம் உரித்துடையது அல்ல. புஷ்பிக்கா கூறியது, தான் பிள்ளையுடன் கணவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்த போதிலும் விவாகரத்துப் பெற்றிருக்கவில்லை என்றாகும். இவ்வாறான போட்டிகளில் கலந்து கொள்ளும் பெண்களின் அனைத்து விடயங்களையும் அறிந்துள்ள ஏற்பாட்டுக் குழுவினர், நடுவர்கள் புஷ்பிக்காவின் விவாகரத்துப் பற்றி அறியாதிருந்தார்கள் என நினைக்கத் தோன்றவில்லை. அவ்வாறு அறிந்து கொண்டும் அவர்கள் புஷ்பிக்காவை நிராகரிக்காதிருந்தால் கரோலினுக்கு அது பற்றி வேதனை ஏற்படுவதற்கு இடமிருந்திருக்காது. அப்படியாயின் கரோலின் புஷ்பிக்காவின் கிரீடத்தைக் கழற்றும் போது ஏற்பாட்டுக்குழுவின் முன்வந்து அதற்கு எதிர்ப்பைத் தெரிவித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்திருக்க வேண்டியது கரோலினின் செயற்பாடு நியாயம் அல்லாத காரணத்தினாலாகும். அது கண்டிப்பாக சட்டதிட்டங்களில் உள்ளடங்காதிருந்ததனலாகும். போட்டி சட்டதிட்டங்களுக்கு அமைய புஷ்பிக்கா நடுவர் குழுவினை ஏமாற்றவில்லை. எனினும் அவ்வாறு இடம்பெறவில்லை. கிரீடத்தைக் கழற்றி புஷ்பிக்கா மேடையிலிருந்து வெளியேறிச் சென்றதன் பின்னர் சந்திமால் மேடைக்கு பின்னால் வந்து பார்த்துக் கொண்டிருந்துவிட்டு சென்றதை காணக் கூடியதாக இருந்தது.

“கரோலின் ஜூரியைப் பற்றியும் கூற வேண்டியுள்ளது. அவர் உண்மையிலேயே எமது நாட்டிற்கு கிரீடத்தைக் வென்றுதந்த ஒரு பெண்ணாகும். அவர் பல நாடுகளின் போட்டியாளர்களைத் தோற்கடித்து மிகப் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றுக் கொண்ட திறமையான பெண்ணாகும்.

உண்மையிலேயே அழகு ராணிகளைத் தெரிவு செய்யும் போது குறித்த பெண்களின் அழகை மாத்திரம் பார்ப்பதில்லை என்பது உலகமே அறிந்த உண்மையாகும். இங்கு போட்டியாளர்களின் அழகு, உடம்பு அமைப்பு, இயக்கம், அவர்களின் அறிவு, புத்திசாலித்தனம், சந்தர்ப்பவாத ஞானம் மற்றும் சந்தர்ப்பத்திற்கு ஏற்ற பதில்களை வழங்கும் செயற்பாடுகளும் கவனத்தில் கொள்ளப்படும். உதாரணமாக, 1994ம் ஆண்டில் உலக அழகு ராணியாக கிரீடம் சூட்டிக் கொண்ட ஐஸ்வர்யா ராயைக் குறிப்பிட முடியும். அவரது இறுதிச் சுற்றில் அவரோடு போட்டியிட்ட தெற்காபிரிக்காவின் அழகி மற்றும் வெனிசுவேலா அழகி ஆகியோரைத் தோற்கடித்து வெற்றி பெறும் வாய்ப்பு கிடைத்தது, இறுதிச் சுற்றில் அவளிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் வழங்கிய பதில்களின் காரணத்தினாலாகும். அந்த பதில்களை உலகிற்கே காட்டியது அவரது புத்திசாலித்தனம். இது ஒரு எளிய உதாரணம் மாத்திரமேயாகும். இந்த உதாரணத்தை நாம் கூறுவது, கரோலின் பெற்றுக் கொண்டதும் இலகுவான வெற்றியல்ல என்பதை உறுதிப்படுத்துவதற்காகும்.

கவலையான விடயம் என்னவென்றால், அப்படியான கரோலின் மேடையின் மீது தான் உலகிற்கே நிரூபித்துக் காட்டிய அறிவு, புத்திசாலித்தனம், பொறுமை, தாய்மை போன்றவற்றை நொடிப் பொழுதில் சிதைத்துக் கொண்டார் என்பதுதான் . புஷ்பிக்கா விவாகரத்துப் பெற்றவராயின் அதற்கு எதிர்ப்பைத் தெரிப்பதைச் செய்ய வேண்டியது நிகழ்வுக்கு முன்னராகும். அதாவது, புஷ்பிக்கா தோற்றுப் போயிருந்தால் அவள் விவாகரத்தானதோ, விரைவில் விவாகரத்து நிகழப்போகின்றது என்பதோ கரோலினுக்கு எந்தப் பிரிச்சினையுமில்லை. கடைசி தருணம் வரைக்கும் தனது எதிர்ப்பைத் தெரிவிப்பதை தாமதப்படுத்திய கரோலின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்பட்டு கடைசி தருணத்தில் தனது நாடகத்தை அரங்கேற்றி தான் அவ்வளவு கஷ்டப்பட்டு பெற்றுக் கொண்ட கிரீடத்தை காலால் மிதித்துள்ளார். மேடையின் மீது தனது நடத்தை, ஆவேசத்தைக் கட்டுப்படுத்த முடியாத ஒரு பெண் எவ்வாறு அழகு ராணியாக ஆக முடியும் என்ற கேள்வி எமது மனங்களில் எழுகின்றது.

எம். எஸ். முஸப்பிர்
(புத்தளம் விசேட நிருபர்)

Comments