மேம்பட்ட உடற்பயிற்சி தீர்வுகளை வழங்கும் Huawei | தினகரன் வாரமஞ்சரி

மேம்பட்ட உடற்பயிற்சி தீர்வுகளை வழங்கும் Huawei

ஆரோக்கியம் தொடர்பில் மக்கள் அதிக கரிசனை கொண்டுள்ளதால், அடுத்த தலைமுறைக்குரிய ஸ்மார்ட் அணிகலன்களானவை, ஆரோக்கியமான மற்றும் சுகதேக வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது. இன்று, மக்கள் நேரத்தைக் அறிந்துகொள்வதற்காக மாத்திரம் கைக்கடிகாரத்தை பயன்படுத்துவதில்லை,

காரணம் அதன் நோக்கம் தற்போது பரந்துபட்ட தாகி விட்டது. இது மிகவும் மேம்பட்ட அணிகலன்களுடன் முழுமையாக இணைக்கப்பட்ட அனுபவத்தை வழங்குகிறது.

தொலைபேசி அழைப்பு முதல் குறுந்தகவல்களை பார்வையிடல், உடற்பயிற்சி, இசையை அனுபவித்தல் வரை, இன்றைய ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறனை அதிகரித்தல், வேலை மற்றும் வாழ்க்கை இடையிலான சமநிலையை உறுதிசெய்தல் போன்றவற்றுக்கு அவசியமான, எதிர்காலத்திற்கு தேவையான பல்வேறு அம்சங்களைக் கொண்டிருக்கின்றன.

தற்போது உலகளாவிய அணிகலன் சந்தையை முன்னோடியாகக் கொண்ட ஒரு முன்னணி தொழில்நுட்ப தீர்வு வழங்குநரான Huawei, வாடிக்கையாளர்களின் சமகால தேவைகளைப் பூர்த்தி செய்யும் தயாரிப்புகளைத் தொடர்ந்தும் வெளியிட்டு வருகிறது. Huawei அணிகலன் வரிசையில் Huawei Watch Fit, Huawei Watch GT2, Huawei Watch GT2 Pro, Huawei Band 4, Huawei Band 4e ஆகியன சமீபத்திய இணைப்புகளாக சேர்ந்துள்ளன.

இப்பட்டியலில் முதன்மையானது 1.64 அங்குல Amoled சதுர வடிவ திரை, ஸ்டைலான வடிவமைப்பு, 10 நாட்கள் வரை நீடிக்கும் மின்கலம், வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் Huawei Watch Fit வருகிறது.

இது சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும் பலவிதமான உடற்பயிற்சி கண்காணிப்பு அம்சங்களுடன் வருவதோடு, அதிலுள்ள அனிமேஷன் கொண்ட பிரத்தியேக பயிற்சியாளர் அமைப்பானது,

அதன் தனித்துவமான உடற்பயிற்சி தொடர்பான அம்சங்களில் ஒன்றாகும். இந்த ஸ்மார்ட் கைக்கடிகாரமானது, 12 அனிமேஷன் உடற்பயிற்சி கற்கைகள் மற்றும் தரப்படுத்தப்பட்ட 44 உடற்பயிற்சி அம்சங்களைக் கொண்டுள்ளது. இது 96 பயிற்சி செயன்முறைகள், 11 தொழில்முறை விளையாட்டு பயன்முறைகள், 85 சுதந்திரமான விளையாட்டு பயன்முறைகள் ஆகியவற்றை கொண்டுள்ளது.

Comments