ஒருங்கிணைந்த சரக்குப் போக்குவரத்துத் தீர்வை விஸ்தரித்துள்ள DP Logistics | தினகரன் வாரமஞ்சரி

ஒருங்கிணைந்த சரக்குப் போக்குவரத்துத் தீர்வை விஸ்தரித்துள்ள DP Logistics

கொவிட்-19 பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி சீனாவிலிருந்து இலத்திரனியல் பொருட்களை வாடகைக்கு அமர்த்தப்பட்ட ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானம் மூலம் கொண்டு வந்துDP லொஜிஸ்டிக்ஸ் (பிரைவட்) லிமிடட் அண்மையில் தனது ஒருங்கிணைந்த சரக்குப் போக்குவரத்துத் தீர்வை விஸ்தரித்துள்ளது.

மிகவும் சவாலான சூழ்நிலையில் இத்தீர்வு வெற்றிகரமாகப் பூர்த்திசெய்யப்பட்டது. சீன வருடப் பிறப்பு விடுமுறை தொடங்கவிருக்கும் நிலையில் விடுமுறைக்கு முன்னதாக பொருட்களை நாட்டிலிருந்து வெளியே எடுப்பதற்கு சேவைபெறுனர் சிரமப்பட்டார்.

விடுமுறை நாட்கள் என்பதாலும், உலகத் தொற்றுநோய் சூழல் தொடர்ந்தும் காணப்படுவதாலும் அவற்றைப் பெற்றுக் கொள்வதில் பாரிய சிரமங்கள் நிறைந்த பின்னணி காணப்பட்டது.

இவ்வாறான நிலையிலேயே DPL, இலங்கையின் கார்கோவுடன் இணைந்து இதில் காலடியெடுத்துவைத்தது. இதற்குத் தீர்வாக வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமானத்தின் மூலம் பொருட்களை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்தது. DPL இன் சீனாவில் உள்ள பிரதிநிதி அந்நாட்டில் பிணைக்கப்பட்ட இடங்களிலிருந்து பொருட்களை சேகரித்து, அவற்றை களஞ்சியப்படுத்தி வைத்து பின்னர் ஷன்ஹாங் புடோங் சர்வதேச விமான நிலையத்துக்கு மாற்றி, குறித்த பொருட்களுக்கான சுங்க செயற்பாடுகளை உரிய காலத்தில் பூர்த்தி செய்து அவற்றை அனுப்புவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்திருந்தது. DPL அணி அவற்றை சீனாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவருவதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தது. பொருட்களை சரியான முறையில் கொண்டுவந்து அவற்றை பாதுகாப்பான முறையில் வாடிக்கையாளரிடம் கையளிப்பதை அக்குழு உறுதிப்படுத்தியது.

விதிமுறைக்கு அப்பாற்பட்டு அசாதாரண தீர்வுகளை வழங்குவதில் DPL உறுதிப்பாட்டைக் கொண்டிருப்பது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சரக்குப் பகிர்தல் பொது முகாமையாளர்இந்திக டி.சில்வா குறிப்பிடுகையில் “DPLஇன் அர்ப்பணிப்புடான துறைசார் நிபுணர்கள் குழுவுக்கு பணியாற்றவதற்கான நேரம் அல்லது நாட்கள் குறித்த எந்த வரையறைகளும் இல்லை.

தனித்தனியான பொருளாதார தீர்வுகளுடன் வாடிக்கையாளர்களின் தனித்துவமான தேவைகளைப் பூர்த்தி செய்ய எதை வேண்டுமாயினும் நாம் செய்வோம்” என்றார்.

Comments