அவசர நிதித் தேவைகளுக்காக அமானா வங்கியின் தங்கச் சான்றிதழ் நிதியளிப்பு | தினகரன் வாரமஞ்சரி

அவசர நிதித் தேவைகளுக்காக அமானா வங்கியின் தங்கச் சான்றிதழ் நிதியளிப்பு

கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசாங்கத்தின் மீள ஆரம்பிப்பு நடவடிக்கைகளின் போது உதவிகளை வழங்கும் வகையில், அமானா வங்கியின் தங்கச் சான்றிதழ் நிதியளிப்புத் திட்டத்தினுௗடாக அவசரப் பணத்தேவைகளுக்கு தற்போது உயர்ந்தளவு முற்பணம் வழங்கப்படுகின்றது. 22 கெரட் தங்கத்துக்கு வாடிக்கையாளர்கள் ரூ. 70000 வரை பெற்றுக் கொள்ள முடியும். பாரம்பரிய அடகு பிடிக்கும் முறைக்கு மாறாக வட்டியில்லாத திட்டமாக அமானா வங்கியினால் அறிமுகம் செய்யப்பட்ட விருதை வென்ற தங்கச் சான்றிதழ் நிதி வசதித் தீர்வு என்பது, சந்தையில் காணப்படும் வங்கிச் சேவைகளை நாடாத, வங்கிச் சேவைகள் சென்றடையாத பிரிவுகளை சென்றடைவது எனும் வங்கியின் கொள்கை நோக்கத்துக்கமைவாக காணப்படுகின்றது.

நாட்டின் பொருளாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்திருப்பதுடன், விவசாயம் மற்றும் இதர சிறுதொழிற்துறைகளுக்கு நிதித் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள, செளகரியமான கடன் வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதாகவும் அமைந்துள்ளது.

வாடிக்கையாளர்கள் தமது தங்க பாதுகாப்பு வைப்பு சான்றிதழை பிணையாக வைத்து, 12 மாதங்கள் வரை மீளச் செலுத்தக்கூடிய மேலதிக செலவுகள் எதுவுமற்ற கடனைப் பெற்றுக் கொள்ளலாம். முதிர்வின் போது, வாடிக்கையாளர் தாம் கடனாகப் பெற்ற தொகையை மாத்திரம் எவ்விதமான மேலதிக கொடுப்பனவுகளுமின்றி செலுத்த வேண்டியிருக்கும். இந்த நிதித் தீர்வு பற்றிய மேலதிக தகவல்களைப் பெற, வாடிக்கையாளர்கள் bit.ly/AB_EmergenceyCash_T எனும் காணொளியேய் பார்க்கலாம்.

இந்தத் தீர்வு தொடர்பான அமானா வங்கியின் நுகர்வோர் - நிதியுதவி பிரிவின் தலைமை அதிகாரி ராமகிருஷ்ணன் கிருபாகரன் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த நெருக்கடியான சூழலில், பலர் கஷ்டங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். மக்களுக்கு நட்பான வங்கி எனும் வகையில், அவர்களின் நிலைமையை புரிந்து கொண்டு, எமது தங்கச் சான்றிதழ் நிதியளிப்பு அவசர பணத் தொகையினுௗடாக வழங்கப்படும் முற்பணத் தொகையை நாம் அதிகரித்துள்ளோம். அதனூடாக அவர்களின் அவசர நிதித் தேவைகளை சுலபமாக புூர்த்தி செய்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.” என்றார்.

Comments