நீரின்றி அமையாது உலகு | தினகரன் வாரமஞ்சரி

நீரின்றி அமையாது உலகு

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 22ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. உலக நீர் தினமாக கொண்டாடப்பட்டு  வருகிறது.  உலக நீர் தினத்தையொட்டி கடந்த 22ஆம் திகதியன்று நாட்டில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.  இவ்வாண்டு  

'இயற்கையும் நீரும்' எனும் தலைப்பில்  உலக நீர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  இதற்காக உருவாக்கப்பட்ட இணைய தளம், “தற்போதைய  நிலையில் இயற்கை முறையில் நாம் நீர் சேகரிப்பை மேற்கொள்ள வேண்டும். மற்றும்  பசுமை மயமாக்கல் மூலமும் நீர் சேகரிப்பு செய்ய முடியும்.   புதிய மரங்களை  நடுதல், நதிகளை இணைத்தல் போன்ற செயல்களும் அவசியம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஐ.நா.சபையின்  அறிக்கையின்படி உலகில் 2.1 பில்லியன் மக்களுக்கு அதாவது 210 கோடி பேருக்கு  பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை.   இவர்களில் 84.4 கோடி பேருக்கு  அடிப்படை குடிநீர் வசதிகளே கிடையாது.  26.3 கோடி பேர் குடிநீருக்காக  தினமும் 30 நிமிடம் பயணம் செய்து குடிநீர் எடுத்து வருகின்றனர். வீடுகளில் குடிநீர் வசதிகள் இல்லாதவர்கள் 66.3 கோடியாகும்.

பூமியில் சுமார் 71% பரப்பளவில் நீர் உள்ளது.  உலகின் மொத்த நீர் வரத்து 33.25 கோடி கன மைல்களாகும்.   உலகிலுள்ள நீர் பரப்பில் கடலில் மட்டும் சுமார் 97% நீர் உள்ளதால்  தூய நீர் மூன்று வீதம் மட்டுமே உள்ளது.உலகிலுள்ள நீர்வளத்தில் 69% உறைந்த நிலையிலும் 30% நிலத்தடி நீராகவும் உள்ளது.

மொத்த நீரில் சுமார் 0.26% மட்டுமே நிலத்தில் நல்ல நீராக உள்ளது. வரும் 2050ம் ஆண்டுக்குள் உலக நீர்த்தேவை இன்னும் 30 வீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அறியப்படுகிறது.    கழிவு நீரில் 80 வீதமான அளவுக்கு சுத்தீகரிக்கப்படாமலே நல்ல நீருடன் கலக்கப் படுகிறது.   மனிதனின் தவறுகளால் கடந்த 1900 முதல் 71வீதமான  நீர்நிலைகள் காணாமல் போயுள்ளதாக  குறிப்பிடப்படுகிறது.

நீர் இன்றி பயிர்கள் இல்லை, நீர் இன்றி உயிர்கள் இல்லை. நீர் இன்றி சுத்தம் இல்லை, நீர் இன்றி தொழில்கள் இல்லை, நீர் இன்றி வீடுகள் இல்லை,     நீர் இன்றி காடுகள் இல்லை, நீர்  இல்லையேல் பூமி தகிக்கும், நீர் இல்லையேல் உயிர்கள் தவிக்கும், நீர்தான் நம் தாகம் தணிக்கும், நீரின்றி அமையாது உலகு என்றே தண்ணீர் பற்றி வள்ளுவர் உரைத்தார். கடலின் நீர் ஆவியாகி, மழையாய்ப்பொழியுது மக்கள்மீது, பெய்த மழைநீர் வீணாகாமல் சேமித்தாலே உலகம் செழிக்கும், தண்ணீர் சிக்கனம் தேவை.  நாம்  நீரைச் சேமிப்பது,  பாதுகாப்பது  என்பது நமக்காக மட்டுமல்ல,  நமது எதிர்கால சந்ததியினருக்காகவும் என்பதை  புரிந்துகொள்ள வேண்டும்.

பெ. திலானுஷா,
மாபோல, வத்தளை.

 

Comments