பிரசாந்த் ஜோடியாக பிரியா ஆனந்த் | தினகரன் வாரமஞ்சரி

பிரசாந்த் ஜோடியாக பிரியா ஆனந்த்

இந்தியில் ஆயுஷ்மன் குரானா நடித்து வெற்றி பெற்ற படம் அந்தாதூன். இந்த படத்துக்கு தேசிய விருதுகள் கிடைத்தன.

மெல்பர்னில் நடந்த ஆஸ்திரேலிய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டும் விருதுகளை வென்றது. தற்போது அந்தாதூன் படம் தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் ஆயுஷ்மன் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கிறார். நடிகர் தியாகராஜன் இயக்குகிறார். இதில் சிம்ரன், கே.எஸ்.ரவிக்குமார், ஊர்வசி, லீலா சாம்சன், மனோபாலா, வனிதா விஜயகுமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இதில் பிரசாந்த் ஜோடியாக நடிக்க நடிகை தேர்வு நடந்தது. தற்போது பிரியா ஆனந்தை ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர் இந்தியில் ராதிகா ஆப்தே வந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

பிரசாந்த் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடிக்கிறார். ஒரு கொலையும், அதன் பின்னணியில் நடக்கும் சம்பவங்களுமே கதை. இந்தியில் தபு வில்லியாக மிரட்டி இருந்தார். அந்த கதாபாத்திரத்தை தமிழில் சிம்ரன் செய்கிறார்.

Comments