பராத் | தினகரன் வாரமஞ்சரி

பராத்

முஸ்லிம்களது இன்னொரு புகழ்
வாய்ந்த ஷஃபான் மாதத்தின்
பராத் வந்ததுவே கொண்டாட
பிறை பதின்மூன்று பதின்நான்கு
பதினைந்து மூன்று நோன்புகள்
நோற்க வேண்டும்
இதில் பராத் இரவுக்கான நோன்பு விசேஷம்
என்னவென்றால் மூன்று யாசீன்
ஓத வேண்டும்
ஒவ்வொரு யாசீன் முடிவிலும்
துஆக்கள் கேட்க வேண்டும்
நீண்ட ஆயுள், ரிஸ்கி, சலாத்தும் பரக்கத்தும்
என கேட்பது வழக்கம்
ரொட்டி, கஞ்சி, வாழைப்பழம், பேரீச்சம்பழம்
போன்றவை செய்து பள்ளி வாயிலுக்கு
மிஸ்கின்களுக்காக அனுப்பி வைப்பார்கள்
அடுத்து நம்மை விட்டு முதியோருக்காக
அல்லாஹ்விடம் கையேந்தி பிரார்த்தனை
செய்வது வழக்கம்
அல்லாஹ்வே இந்த வருடமும் அனைவருக்கும்
அனைத்தும் வழங்கி அரவணைப்பாக
எல்லோரும் பிரச்சினையின்றி இருக்க
உன்னிடம் வேண்டி கையேந்துகின்றேன்!
ஆமீன்! யாரப்பல் ஆலமீன்

இ. ஷமீலா இஸ்மத்

Comments