உலகக்கிண்ணக் கால்பந்து 2022: தகுதிகாண் ஆட்டம் ஒன்றின் விற்றுத் தீர்ந்த நுழைவுச்சீட்டுகள் | தினகரன் வாரமஞ்சரி

உலகக்கிண்ணக் கால்பந்து 2022: தகுதிகாண் ஆட்டம் ஒன்றின் விற்றுத் தீர்ந்த நுழைவுச்சீட்டுகள்

நெதர்லாந்தில் உலகக்கிண்ண கால்பந்து 2022-க்கான தகுதி ஆட்டம் ஒன்றின் நுழைவுச்சீட்டுகள் வந்த வேகத்தில் விற்றுத் தீர்ந்தன. 

நெதர்லாந்துக்கும் லாட்வியாவுக்கும் இடையிலான அந்த ஆட்டத்தின் நுழைவுச் சீட்டுகள் அனைத்தும் அரை மணிநேரத்திற்குள் விற்றுமுடிந்தன என்று தெரிவிக்கப்பட்டது. COVID-19 காரணமாக நெதர்லாந்தில் விளையாட்டு அரங்கங்களில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.ஆனால் தற்போது சோதனை முயற்சியாக அங்கு 5,000 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் இரசிகர்கள் நுழைவுச்சீட்டுகளை விரைந்து வாங்கினர். 

சீட்டுகள் விற்றுத் தீர்ந்தது குறித்து அந்நாட்டுக் காற்பந்து சம்மேளனம் மகிழ்ச்சி தெரிவித்தது.ஜோன் Cruijff விளையாட்டு அரங்கில் மார்ச் 27ஆம் திகதி ஆட்டம் இடம்பெறுகிறது. இரசிகர்கள் குழுக்களாகப் பிரித்து பிரித்து அமர்த்தப்படுவார்கள் என்று சம்மேளனம் தெரிவித்தது. ஆட்டத்தைக் காண வரும் இரசிகர்கள் தங்களுக்கு நோய்த்தொற்று இல்லை என்ற சான்றிதழை அரங்கத்தின் நுழைவாயிலில் காட்டவேண்டும், அப்போதுதான் அனுமதி என்று தெரிவிக்கப்பட்டது.

Comments