கேரளா பக்கம் ​சென்ற காயத்ரி | தினகரன் வாரமஞ்சரி

கேரளா பக்கம் ​சென்ற காயத்ரி

தமிழில் நடுவுல கொஞ்சம் பக்கத்த  காணோம், ரம்மி, சீதக்காதி, புரியாத புதிர் படங்களில் நடித்த காயத்ரி  தற்போது கேரளா பக்கம் சென்றிருக்கிறார்.                         

காயத்திரி மலையாளத்தில் ரிதிஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்ற படம்  'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்'. இதில் சுராஜ், சௌபின், சூரஜ் உள்ளிட்ட பலர்  நடித்தனர்.

2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்குச் சிறந்த நடிகர்,  அறிமுக இயக்குநர், கலை இயக்குநர் ஆகிய கேரள மாநில விருதுகள் கிடைத்தன.

இந்தப்  படத்தின் தமிழ் ரீமேக்கில் கே.எஸ்.ரவிகுமார் நடித்துத் தயாரித்து  வருகிறார். 'கூகுள் குட்டப்பன்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இதன்  படப்பிடிப்பு தென்காசியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று  வருகிறது.

இந்நிலையில் 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்' படத்தின் இயக்குநர் ரதீஷ்  பாலகிருஷ்ணன் தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார்.  இதில்  குஞ்சாக்கோ போபன் நாயகனாக நடிக்கவுள்ளார். இதில் நாயகியாக  ஒப்பந்தமாகியுள்ளார் காயத்ரி. மலையாளத்தில் காயத்ரி அறிமுகமாகும் முதல்  படமாக இது அமைந்துள்ளது.

தற்போது தமிழில் விஜய் சேதுபதிக்கு நாயகியாக  காயத்ரி நடித்துள்ள 'மாமனிதன்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

Comments