யோசிப்போம் | தினகரன் வாரமஞ்சரி

யோசிப்போம்

உழைத்து, உழைத்து
மாடி
வீட்டைக்கட்டு
அதைத்தான்
விரும்புவாள்
உன் பட்டு
வீட்டை முடிக்க
நீயும்,
கடன்பட்டு
நீயும் ஒரு நாள்
கஷ்டத்தில்
மாட்டுப்பட்டு,
அதை
அடைக்கமுடியாமல்
கேவலப்பட்டு,
மகளின்
திருமணத்தையும்
முடித்திட்டு
கடனோடு
கிடக்கவரும்
கவலைப்பட்டு
மருமகனும்
துரத்தி விடுவான்
உன்னை வீட்டைவிட்டு,
மகளும் அவள்
கணவனின் சொல்லுக்கு
கட்டுப்பட்டு
மௌனமாகிவிடுவான்
உன்னை
விட்டுப்போட்டு
எனவே கடன் படாமல்
அளவாக
வீட்டைக்கட்டு
படைத்தவனின்
சொல்லுக்கு
கட்டுப்பட்டு,

கலாபூஷணம்
நிந்தவூர் மக்கீன் ஹாஜி

Comments