திருப்பி அனுப்புகிறேன் | தினகரன் வாரமஞ்சரி

திருப்பி அனுப்புகிறேன்

உச்சியில் நின்று
உன்னைத் தேடுகிறேன்...
பட்சியிடம் உனக்காய்
தூது அனுப்புகிறேன்...
அடிக்கும் பனியின்
குளிரையும் தாண்டி...
எரிக்கும் வெயிலின்
வெப்பம் கடந்து..
உன்னிடம் வேகமாய் வருகிறது
பட்சி...
அதனிடம்...
தூதாய்
என் இதயத்தை அனுப்புகிறேன்...
அதற்குள் பத்திரமாய்
என்றும் நீயிருப்பாய்...
நானிருக்கும்
உன் இதயத்தை...
பதிலுக்கு கொடுத்து விடு...
அதனை பார்த்துவிட்டு
அனுப்புகிறேன்...
உன்னையே தினமும்
பார்த்துக் கொண்டிருப்பதால்...
என்னை எனக்கே
மறந்து விட்டது...
அதனால்தான் கேட்கிறேன்...
நானிருக்கும்
உன் இதயத்தை
கொஞ்சம் அனுப்பிவிடு...
பார்த்துவிட்டு
திருப்பி அனுப்புகிறேன்...

பாத்திமா சில்மியா 
புத்தளம்

Comments