அன்பை உணர் நன்றே! | தினகரன் வாரமஞ்சரி

அன்பை உணர் நன்றே!

ஒன்றோடு ஒன்றாய்,
இருவரும் அன்பில்
உணர்வதே  உண்மையில்
நிலைத்திடும் காதல்!
தேன் போன்ற தீஞ்சுவை
இன்பமதை இருவர்
பண்புடன் ஒன்றி
பழகிடும் போதினில்
உண்மை செய் அன்பே,
பெரிதாகும் அன்றி
வேறே ஒன்றை
காண்கிட விரும்புமோ !
குறைதனை
சுட்டி ஆளுகிறதான பேச்சு
விரும்பும் மகளிர்
மென்மை இதயம்
சுக்கு நூறாய் சிதைக்குமே!
மணக்கோலம் பூண்டும்
விழா ஆண்டுகளும் கண்டு
பல்லாண்டு காலமதாய்
மகிழும் நற் தம்பதியர்
முகம் கண்டு இன்புறும்
பயன் சொல்வீர் என கேட்பின்
முன்னம் அவர் அக களிப்பு
கண்களால் வெளிச்சமாகும்
ஒன்றாய்இணைந்த அன்பே,
வாழ்வதிலே பிரிவகற்றும்
என்றே மகிழ்வுடனே
அவர் பதிலும் நிறைவு தரும்
திருமண நாளதிலே
மலர்மாரிதனை பொழிந்தே
வாழ்த்திடுவீர்  இனிதே
என சொல்லலதிலும் முன்மொழிந்து
வாழ்த்தியும் பயன் ஏது
வாழ்விலே இடையூறு
வந்திட்டாலும் அன்பு செய்து
கையொரு கை கோர்த்து
இணைபிரியாதிருத்தல் ஒன்றே
நல் வாழ்வுக்கு நிலையாகும்
இல்லறமது சிறந்தே !
இனிதிலாய் இலங்கிடவே
ஒரு சொல்லில் ஓதியதாம்
ஒன்றது நன்றுளது
அன்பு செய்வீர்-என்பதுவே
அதுவேயாம் ,
இனிய பயன்

நீ பி அருளானந்தம்

Comments