பிரியாபவானியின் தீராத ஆசை | தினகரன் வாரமஞ்சரி

பிரியாபவானியின் தீராத ஆசை

மேயாத மான் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி நம் மனதைகொள்ளையடித்து, 'களத்தில் சந்திப்போம்'ல் கலக்கி வரும் நடிகை பிரியா பவானி சங்கர் மனம் திறக்கிறார்...

களத்தில் சந்திப்போம்'  படம் பற்றி

ஜீவா, அருள்நிதி என இரண்டு ஹீரோ. நான் அருள்நிதிக்கு ஜோடி. மஞ்சுமா தான் ஹீரோயின். நான் அருள்நிதியுடன் கொஞ்சம் வந்து போறேன். படம் பார்க்கும் பசங்க நட்பை நினைச்சு பார்ப்பாங்க. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் சூப்பர்.

எப்படி ஒரு கதையில் நடிக்க முடிவு எடுப்பீர்கள்?

படத்தின் தயாரிப்பாளர் யாருன்னு பார்ப்பேன். இன்றைய சூழலில் பெரிய தயாரிப்பாளர்களே அதிக படம் கொடுக்குறது இல்லை.. அதனால் தயாரிப்பு அப்புறம்; கதை நல்லா இருக்கான்னு பார்த்த தான் முடிவு எடுப்பேன்.

மீடியா டூ நடிகை வரவேற்பு எப்படி இருக்கு?

சினிமாவுக்கு நான் வரும் போது பெரிய வரவேற்பு இல்லை. .வேலை செய்த  'டிவி' நிறுவனம் எனக்கு பிளஸ். நிறைய மக்களிடம் கொண்டு சேர்த்தது. இயக்குனர்கள் கார்த்திக் சுப்புராஜ், ரத்னாவுக்கு நன்றி. 'மேயாத மான்' நடிக்கும் போது பெரிய வாய்ப்புனு தெரியலை, அதுதான் சினிமா பயணத்தை மாற்றி இருக்கு.

உங்களை ரசிக்கும் ரசிகர்கள் பற்றி

என்னை 'டிவி'யில் பார்த்த பார்வையாளர்கள் இப்போ சினிமாவில் பார்க்கிறார்கள். ரசிகர்கள் ஈஸியா கிடைக்க மாட்டாங்க. 'டிவி' வாய்ப்பை சரியா பயன்படுத்துறேன்னு நம்புறேன், 'டிவி'யில் இருந்து வந்து 2படம் நடிச்சுட்டு போயிட்டாங்கனு தவறான உதாரணமாக விரும்பலை.

பட வாய்ப்பை பெறுவதற்கான போட்டிகள்

சினிமா துறையில் போட்டிகள் நிறைய இருக்கும். ஒரு வாய்ப்புக்கு தகுதியானவர்கள் நிறைய பேர் இருக்காங்க. நம்மள மீறி நமக்குள் ஒரு ஒப்பீடு வந்து விடும். போட்டியை பார்த்து ஓட ஆரம்பிக்க கூடாது. முடிந்தவரை  வாய்ப்பைப் பெற முயற்சி செய்யனும்.

உங்களை ரசிகர்கள் கிளாமரில் பார்க்கணும்னு...

'விண்ணைத்தாண்டி வருவாயா'ல் திரிஷா கிளாமர் பண்ணினாங்க. அதுல ஸ்கின் வெளியே தெரியலை. முகம் சுளிக்க வைப்பது தான் கிளாமர் என்றால் ஆபாசம்னு தான் சொல்லுவேன். ரொம்ப எளிமையான பொண்ணு கிளாமர் பொண்ணு இல்லை

தமிழ் சினிமாவில் உங்கள் ஆசை

'டிவி'யில் ரியாலிட்டி ஷோ பண்ணி பேமஸாகலாம். சினிமா அப்படி இல்லைங்குற புரிதலோடு 'மேயாதமான்' நடித்தேன். மக்கள் வரவேற்பு கொடுத்தாங்க. கிடைக்கும் படங்களில் எல்லாம் நடிப்பதை விட நல்ல படங்களில் நடித்தாலே போதும்.   

Comments