இன்ப அதிர்ச்சி அளித்த ஸ்லிம் நயன்தாரா | தினகரன் வாரமஞ்சரி

இன்ப அதிர்ச்சி அளித்த ஸ்லிம் நயன்தாரா

திரவுபதி’ படத்தை இயக்கிய மோகன்ஜி அடுத்து, ‘ருத்ரதாண்டவம்’ படத்தை இயக்கி வருகிறார்.

இதில் கதாநாயகியாக நடித்து இருப்பவர், ஸ்லிம் நயன்தாரா தர்சாகுப்தா. இவருடைய நடிப்புக்கும், படத்துக்கும் இப்போதே எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

ஸ்லிம் நயன்தாரா தர்சாகுப்தா இன்ஸ்டாகிராமில், 1மில்லியன் பார்வையாளர்கள் வந்ததை தொடர்ந்து தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் கொண்டாட விரும்பினார். சென்னையில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஓட்டலில் அவர், ரசிகர்களை சந்தித்தார். கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் இருந்து சுமார் 300ரசிகர்கள் வந்திருந்தனர்.

அவர்களுடன் உரையாடிய ஸ்லிம் நயன்தாரா, ரசிகர்களுடன் அமர்ந்து விருந்து சாப்பிட்டார். அவருடன் ரசிகர்களும் விருந்து சாப்பிட்டார்கள். இப்படி ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் விருந்தும் சாப்பிட்ட ஒரே நடிகை ஸ்லிம் நயன்தாராதான்.

ரசிகர்கள் கொடுத்த அன்பளிப்பை பெற்றுக்கொண்டதுடன், அவர்களின் கேள்விகளுக்கு பதிலும் அளித்தார். அதோடு அவர் ரசிகர்களின் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசியதை பார்த்து, ரசிகர்கள் நெகிழ்ந்து போனார்கள். சிலர் ஆனந்த கண்ணீரை அடக்க முடியாமல், விம்மி னார்கள்.

 

Comments