இப்படி நடந்தால் என்ன...? | தினகரன் வாரமஞ்சரி

இப்படி நடந்தால் என்ன...?

அப்புகாமியின் வீட்டில் 'ஆஆ.... ஆஆ... துவ பாசலட்ட யன் னெத்த? நகின்ட வெலாவ கத்தாய்' என்றாள் திங்கிரி மெனிகே அப்புகாமியின் மனைவி. சுமனா டீச்சரின் தாய்.

நேரம் ஏழு மணி என்று அம்மா சொன்னதும் மகள் சுமனா வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்து காலைக் கடனை அவசர அவசரமாக முடித்துக் கொண்டாள் வீதிக்கு இறங்கி பாடசாலை நோக்கி விறு விறு என்று நடந்தாள். இடையில் தான் தன் பேக்கை மறந்தது நினைவுக்கு வந்தது. அப்போதும் மகாலிங்க மாஸ்டரின் முகம் தான் அவள் முன் வந்து நின்றது. அவன் நினைவோடே நடந்தாள் வித்தியாலயத்தை அடைந்தாள். தினவரவு இடாப்பில் கையெழுத்திட்டாள் அவள் தான் 'இலாஸ்ட் பஸ்'. மகாலிங்க மாஸ்டர் கையெழுத்தை தான் தேடினாள். மனதின் ஆழத்தில் களிப்பு எங்கோ ஒரு மூலையில் ஊசலாடிக்கொண்டிருந்தது.

சுமனா டீச்சரும் மகாலிங்க மாஸ்டரும் ஒரே 'இஸ்டாப்'. அவள் அம்/ அல் அம்ரா வித்தியாலயத்தில் சிங்களம் போதிக்கும் ஒரு சிங்கள ஆசிரியை. கலியாணமே வேண்டாம் என்றும் திருமண பந்தத்தில் இணையப்போவதில்லை என்றும் வைராக்கிய நெஞ்சோடு இருந்தவள் சுமனா டீச்சர்.

மாற்றலாகி வந்து ஒரு வருடம் பூரணமாகாத நிலையில் மகாலிங்கம் மாஸ்டர் அவள் வைராக்கியத்தை தகர்த்துவிட்டார். அன்று மாலை பெற்றார் ஆசிரிய சங்க கூட்டத்தில் மகாலிங்கம் ஆற்றிய உரை அவளைப் பெரிதும் கவர்ந்தது. இந்த உரையினால் மகாலிங்க மாஸ்டரின் மீது சுமதிக்கு மேலும் நேசம் ஓங்கியது. அவள் சிந்தனையில் ஆழ்ந்து விட்டாள். அவளின் எண்ணமும் அது தான். அதனால் அவன் மீது உள்ள விருப்புக்கு மெருகூட்டியது.

யாழ்/ இந்துக் கல்லூரியில் இருந்து அம்பாந்தோட்டை அல் அம்ரா மகா வித்தியாலயத்துக்கு அதிபர், பெற்றோர், அரசியலாளர்களின் செல்வாக்கால் மகாலிங்கம் மாஸ்டர் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு அங்கு பிரியாவிடை கூட்டத்தில் கலந்து கொள்ளாத ஒரே ஒரு டீச்சர் என்றால் அது மகாலிங்க மஸ்டரின் தாய் மாமன் மகள், சுமதி டீச்சர் தான். அவள் அந்த மகாலிங்க மாஸ்டரின் பிரிவு உபசார வைபவத்தில் கலந்து கொள்ளவில்லை.

சுமதி டீச்சர் கலந்து கொள்ளாதது மகாலிங்க மாஸ்டரை மட்டும் அல்லாமல் அதிபர், பெற்றார்கள், சக ஆசிரியர்கள் உட்பட அனைவரையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கிது. அன்வர் மாஸ்டரை தவிர. அன்வர் மாஸ்டரிடம் சுமதி டீச்சர் ஏற்கனவே தான் சமூகம் தர மாட்டேன் என்று சொல்லி இருந்தாள் அதனாலேயே அன்வர் மாஸ்டர் எவ்வித சலனமும் இன்றி இருந்தான். சுமதி டீச்சருக்கும் அன்வர் மாஸ்டருக்கும் இடையில் சாடையான 'அது' இருப்பதாக சில வாத்திமாருக்குத் தெரியும். அந்த ஒரு சில வாத்திமார் 'பெயாவல் மீட்டிங்' இல் அன்வரைப் பார்த்த பார்வையில் அது தெரிந்தது. ஏனென்றால் அவன் முகம் மட்டுமே மாறுதலின்றி மலர்ந்திருந்தது.

வாலிபனான மகாலிங்க மாஸ்டரின் மனம் சூடேறி அங்கு பரிமாறப்பட்ட குளிர்பானத்தின் குளிராலோ ஏஸியாலோ அந்தச் சூட்டைத் தணிக்க முடியவில்லை. கூட்டம் ஆரம்பித்த போது எல்லோரும் அவனைப் பார்த்த பார்வை மேலும் முகத்தை வாடச் செய்து சோகையாக்கியது. பிரிந்து போகும் போது மனவருத்தமாக இருந்தாலும் அடுத்த நாள் மனச்சுமையுடனே சுமதியிடம் இருந்து விடை பெற்றான் அவன்.

தோற்று விடுவோமோ என்ற பூதாகர சிந்தனை அவனை வாட்டியது. ஏன் சுமதி பிரியாவிடைக்கு வரல்ல என்ன வீட்டு வேலையா நேற்று நீ லீவு போட்டது ஏன்? அவனே மறுமொழியாக கேள்வியை கேட்டான். அவள் மௌனமாக தலையை அசைத்தாள்.

ஓம் சேர் எனக்கும் கொஞ்சம் உடம்பு சுகம் இல்லாதது போலே கிடந்தது கோவிச்சுக் கொள்ளாதிங்கோ என்றாள். அவள் பொய் சொல்லுகிறாள் பொருந்தச் சொல்லுகிறாள். என்பதை அவளின் தடுமாற்றம் தெரியப்படுத்தியது. மகாலிங்க மாஸ்டருக்கு விளங்காது என்று அவள் நினைத்துக் கொண்டாள் போலும்.

சரி சரி டீச்சர் நான் போட்டு வாரன், ஆ என்றவள் நல்லம் போட்டு வாருங்கோ, என்ற பதிலை எதிர்பாராமல் வெடுக்கென்று திரும்பியும் பார்க்காமல் கம்பீர நடை நடந்து சென்றான். தன்னைப் பார்ப்பான் என்ற நினைவோடு தான் நடந்தாள் ஆனால் சுமதி டீச்சரின் மனப்பாரம் சற்று இறங்கியது, நடந்து சென்ற மாஸ்டரின் மனம் சுமை ஏறிக் கனத்தது.

வடக்கிலிருந்து தெற்குக்கு வந்த மகாலிங்கம் மாஸ்டருக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் இருந்தது காரணம் படிபிப்பிக்கக் கூடிய கெட்டிக்கார ஒரு வாத்தியார். அந்த மகா வித்தியாலத்தில் படிப்பிக்கும் முஸ்லிம் ஆசிரியர்களுக்குள் அதிபர் உட்பட அரைவாசிக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் யாழ்ப்பாண வாத்தியார்களிடம் கல்வி கற்று தேறியவர்கள் தான்.

சுமதியின் சுமையோடு வந்த மகாலிங்க மாஸ்டருக்கு அவர்களின் வரவேற்பும் உபசரிப்பும் மரியாதையும் சற்று பாரத்தை குறைத்தது. அதைவிட சிங்கள டீச்சரின் நட்பு மேலோங்கியது என்றாலும், தன் உறவுமுறையான சுமதி டீச்சரின் நினைவு அவன் மனதின் அடி மூலையில் எங்கோ ஓர் இடத்தில் இருந்து கொண்டு தான் இருந்தது.

அன்றைய ' மெயி' லில் மகாலிங்க மாஸ்டருக்கு ஒரு கடிதம் இருந்தது அதிபர் அவங்க அவங்க கடிதங்களை தெரிவு செய்து அனுப்பினார் . அந்த கடிதத்தை கண்ட நேரம் முதல் மகாலிங்கத்துக்கு ' இலக்ரிக் சொக்' அடித்தால் போல் எதிலும் பற்றற்ற விரக்தி மனோ பாவம் வேரூன்றியது. அதனால் அவன் அரைநாள் லீவில் தன் குவாட்டஸ்க்கு சென்று விட்டான். அடுத்த நாள் ஒரு லோங் லீவில் சென்றவன் டேம் லீவும் முடிந்து தான் வந்தான்.

இது நேற்றுப் போல தான் இருந்தது கடிதம் வந்து சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது நடந்து அங்கு படிப்பிற்கும் சக ஆசிரியர் கமால் மாஸ்டரும் மகாலிங்க மாஸ்டரும் சந்தித்து கொண்டார்கள் மூன்று மாதங்களுக்கு பிறகு கடற்கரை மணலில் தனிமையில் கடலைப்பார்த்த வண்ணம் இருந்த மகாலிங்க மாஸ்டர் வலப்பக்கமாக திரும்பி மச்சான் கமால் வாடப்பா வா சந்தோச மிகுதியால் கூவி அழைத்தான் ஆ... ஆ... மகாலிங்கம் எப்ப அப்பா? ஊரிலே இருந்து எப்போ வந்த நீ. நேற்று வந்தனான் மச்சான் கொஞ்சம் பயண களைப்பாகக் கிடந்தது குவாட்டசிலே படுத்து கிடந்தனான். நாளைக்கு பள்ளிக் கூடத்துக்கு வருவேன்.

டேய் மகாலிங்கம் ஒன்ர சந்நியாசி வேடத்தை கலையடாப்பா. இந்த உலகத்துக்கு நாம் வாழத்தானே வந்திருக்கிறோம். விரைவாக போகும் முன் நமக்கு என்றொரு வாரிசு இருக்கத்தானே வேண்டும். உன் இளமையை வீணாக கடலில் கொட்டப்போகிறாயா. அவள் எப்போதும் விரும்பிக் கொண்டு தான் இருக்கிறாள். அவள் உன்னைக் கண்ட உடனே அவளின் வைராக்கியம் இழந்து மனம் இளகி தவம் கிடக்கிறாள். நீ விரும்பிய உன் சொந்தக்காரி சுமதி என்ற டீச்சர் அன்வர் என்ற மாஸ்டருடன் கலியாணம் முடிச்சி ஒரு புள்ளையும் இருக்கு அப்போ நீ விரும்பிய பெண்ணை விட்டு உன்னை விரும்பும் சுமதியை கட்டுடப்பா... கமால் மாஸ்டர் முடிக்கவில்லை அட கமால் உனக்கு எப்படிப்பா தெரியும் கடிதத்தை பார்த்த நீயோ? ஊரிலே நான் கேள்விப்பட்டு அறிந்ததை விட கூடுதலாக சொல்லுகிறாய் நீ!

அப்படி 'மெனஸ்' இல்லாதவனாப்பா நான், அந்த பொடிச்சி கட்டின அன்சாரும் நானும் ஒரே ‘பெச் மெட்' அவன் தான் சொன்னான் சொந்த முறை மச்சானை விட்டுப்போட்டு என்னை விரும்பிறாள் அவள நான் கட்டி ஒரு பிள்ளையும் இருக்கிறாள் என்று. கமால் மாஸ்டர் சொன்ன குட்டிச் செய்தியை புத்திமதியாக மகாலிங்க மாஸ்டருக்கு போதை ஏறி விட்டது.

இது நடந்து ஒரு வருடம் ஆகியது. மகாலிங்க மாஸ்டருக்கும் சிங்கள டீச்சருக்கும் கலியாணம் நிச்சயமாகிவிட்டதாம் என்ற செய்தி ஊர் முழுக்க பரபரப்பாகி யது.

மகாலிங்க மாஸ்டரின் பெற்றோர் உற்றார் உறவினர் குடும்பத்தை பொடியப்புகாமி குடும்பம் வரவேற்று உபசரித்தது. மாப்பிள்ளை மகாலிங்கத்தை மறந்தவள் போல் சுமனா மாமா மாமியை உபசரித்தாள்.

அவள் மணப்பெண்ஸ்தானத்தில் ஒரு டீச்சர் ஸ்தானத்தில் இருக்கவில்லை சாதாரண வீட்டுப்பணிப்பெண் போல பம்பரமாய் சுழளன்று போவோர் வருவோரை வரவேற்றாள். அவளின் பெற்றோரான பொடியப்புகாமியும் அவன் மனைவி மெனிக்கேயும் நெருப்புத் தணலில் கால் வைத்தவர்கள் போல் ஓடித்திருந்தார்கள். அதிபர் அஹமது லெப்பை அவர் குடும்பம், டேவிட் ஜோன் கல்வி அதிகாரி அவர் குடும்பம். சாதாசிவம் மாஸ்டர் குடும்பம், இப்படி முத்தமிழ் விழா கோலம்பூண்டது. மூவின மக்களும் கூடி ஒரு விழாவாக காட்சி அளித்தது அந்த கலியாண வீடு சாதி, மத, இன, மொழி என்ற பேதமில்லாதது காதல்.

மஜீத் றாவுத்தர்- கிண்ணியா

Comments