மனதுக்குள் மரம் | தினகரன் வாரமஞ்சரி

மனதுக்குள் மரம்

தனி மரமே
உனக்கேது கவலை?
என யாருமே நினைக்கலாம்
பூக்காத இலைப்பரப்புத்தான்
என்றாலும் – நீயும் மனதுக்குள்
பூக்களை புஸ்பிக்கிறாய்
பூ காய்ந்தால் தானே
கல்லெறிதலும் விழும்
அதையும் பட்டு நொந்திடவே
உனக்கும் மனதுக்குள் இஷ்டம்
காய் பழுத்தும் கீழே விழுந்து
சொரியாவிட்டால்
எவருக்குமே நீ ஒருப்
பிரயோசனமுமே இல்லவே இல்லை!
எனில் அதையுமே நீ
செய்திடல் ஆவதும் தேவை!
எந்தப் புயலுக்குமே நீ பிடுங்கி
எறியப்படா நிற்றலின் உறுதியும்
மிக மிக அவசியமானதே!
கொடுமழைதனிலும் நீ கிடந்து
நன்றாகவே நனைந்திடு
மின்னல் இடி இடிக்கும் நேரம்
கடவுளே... என்றிடு!
உரத்தைக் கூட்டி வெறித்த வெயிலுக்கும்
கிடந்து நன்றாகவே வேகு!
இவையெல்லாமே உனக்கென்றே
முழு மனதுடனும் ஏற்றுக்கொள்!
மரமேயானாலும் கூட உனக்கோ
நல்ல மனம்தான்!
உன் மனம் வறண்டே போயினதன் காலம்
இலைகள் கவலையில் பழுத்து உதிர்ந்தாலும்
விறுவிறுவென மீண்டு வந்திடுமே
உனக்கென்றே வசந்தமாக
அமைந்த அத் தளிர்!

நீ.பி. அருளானந்தம்

Comments