தித்திக்கும் தினகரன் | தினகரன் வாரமஞ்சரி

தித்திக்கும் தினகரன்

தேசிய நாளிதழ் நீயோ
தேன் தமிழின் காவியமும் நீயோ
ஆசியாவின் நிகழ்வுகளை
அள்ளித் தரும் கற்பக தருவும் நீயோ
வண்ண வண்ண பக்கங்களோடு
வாரம் முழுவதும் வருகின்றாய்
கன்னத்தில் பிறர் கை வைக்கும்படி
கலைக் களஞ்சியமாக திகழ்கின்றாய்
உறுதியான தகவ‌ல்களையும்
உரிமையோடு தருகின்றாய்
அறுதியாகும் தமிழ் பெருமைகளை
ஆர்வத்தோடு வெளியிடுகின்றாய்
தினம் தினம் நீ வந்தாலும்- உந்தன்
தித்திப்புக்கு பஞ்சமில்லை
மனம் பல வென்றாலும் - உந்தன்
மௌனத்திற்கு யாரும் நிகரில்லையே
தனிமையில் உனை பற்றினேன் -உன்
தமிழோடு உறவாடித் தித்தித்தேன்
இனிமையான உன் இதழ்களையும்
இஷ்டத்தோடு தினம் தழுவிக் கொண்டேன்
எப்போது வருவாயோ
ஏக்கங்கள் தீர்பாயோ
தவறாமல் நீ வந்து
தமிழ் தாகம் தணிப்பாயோ
என எண்ணி எண்ணியே நகர்கிறேன்...

தேவந்தி காரைதீவு

Comments