தேசிய விருதை குறிவைத்து விபசார பெண் ‘தாதா’ வேடத்தில் அலியாபட் | தினகரன் வாரமஞ்சரி

தேசிய விருதை குறிவைத்து விபசார பெண் ‘தாதா’ வேடத்தில் அலியாபட்

மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் உள்ள ஒரு பெண் தாதாவை முக்கிய கதாபாத்திரமாக வைத்து, ‘கங்குபாய் கத்தியாவாடி’ என்ற இந்தி படம் தயாராகிறது.

தேசிய விருதை குறிவைத்து இந்த படத்தை பிரபல இந்தி டைரக்டர் சஞ்சய்லீலா பன்சாலி டைரக்டு செய்து வருகிறார். இவர் டைரக்டு செய்யும் 10-வது படம், இது.

இதில், சிவப்பு விளக்கு பகுதியில் அழகிகளை வைத்து விபசார தொழில் நடத்தும் பெண் ‘தாதா’வாக அலியாபட் நடிக்கிறார். பிரபல இந்தி நடிகைகள் 2பேர் நடிக்க மறுத்த இந்த வேடத்தில், அலியாபட் துணிச்சலுடன் நடித்து வருகிறார்.

எந்த ஒரு நடிகர்- நடிகையிடம் இருந்தும் சிறப்பான நடிப்பை வெளியே கொண்டுவருவதில் பெயர் பெற்ற டைரக்டர் பன்சாலி, அலியாபட்டின் திறமையான நடிப்பை வெளியே கொண்டு வந்து இருக்கிறார். அவருடைய பிறந்தநாளில் (கடந்த 24-ந்  திகதி) படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அதில் அலியாபட்டின் சிறந்த நடிப்பும், ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசையும் வெளிப்பட்டு இருக்கிறது. இதுபற்றி இந்தி திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

‘கங்குபாய் கத்தியாவாடி’ படத்தை வருகிற ஜூலை மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர்.

Comments