மகளிர் தினம் | தினகரன் வாரமஞ்சரி

மகளிர் தினம்

அடுப்பு ஊதும் பெண்ணுக்கு
படிப்பதற்கு? கேட்டவர் அன்று
பெண்ணும் தொழில் பார்த்தால்

தான் குடும்ப வண்டி ஓடும் என்றனர் இன்று
தாய்ப்பால் ஊட்டிய தாய்
இன்று வீரத் தாயாய் தெரிகின்றாள்

ஆராரோ பாடிய தாய் வீரத்தாலாட்டும்
சேர்த்து கற்றுக் கொடுக்கின்றாள்
அகரம் தொட்டு சிகரம் தொடுகின்றாள்

சாதனைகள் பல புரிகின்றாள்
மண்ணைத் தொட்டு விண்ணைத் தொட்டு
கம்பீரமாக மார்த்தட்டிச் செல்லும்
பெண்கள் எங்கே?

ஊரையே ஏன் உலகையே ஆட்சி
புரியும் பெண்கள் எங்கே?
பாரதி கண்ட புதுமைப் பெண்
வாழ்க மகளிர்!

வான்மதி

Comments