தாயின் பொறுப்பு | தினகரன் வாரமஞ்சரி

தாயின் பொறுப்பு

தாயவளை
ஏன்?
புறக்கணிப்பு
ஆம்...
தாயே நீ...
ஏன் உன்மகளுக்கு
தாய்ப்பால் கொடுப்பதில்
செய்தாய்,
இருட்டடிப்பு
அதனால்தான்
ஏற்பட்டதோ
பாசத்தில்
வெடிப்பு
இஸ்லாம் சொன்னதே
குழந்தைக்கு
இரண்டுவருட
பால் கொடுப்பு
இன்று என் மகள்
கவனிக்கிறாளில்லையே
என்ற உன்
கொதிப்பு
நீயோ
மாட்டுப்பாலை,
கொடுத்தது
பெருந் தப்பு
அதனால் தானோ என்னவோ
இன்று,
உன் மகளுக்கு
உன்னிலுள்ள
வெறுப்பு

கலாபூஷணம்,
நிந்தவூர் மக்கீன் ஹாஜி

Comments