கலியுக இராமன் வனவாசம்... | தினகரன் வாரமஞ்சரி

கலியுக இராமன் வனவாசம்...

கலியுக இராமன்
இராச்சியமிழந்து
கானக வாசம்
போகிறான் தனியே!
கலியுகச் சீதையின்
கையில் பேஸ்புக்கும்
இலக்குவன் கையில்
செல் போனும்
இருப்பதால் இருவரும்
இராமனின் பிறகே- வனம்
போக வரவில்லை!
இதனைக் கண்ட
கடத்தல் பேர்வழி
இராவணனுக்கு – அந்த
சீதை(ப்) பிடிப்பு இல்லை!
அதனால் வந்த
அசோக வனத்தில்
அனுமனுக்கும்
அலுவல் இல்லை!
இந்தக் கலியுக இராமனின்
கானகக் கதையிதை
எந்தக் கம்பன் வந்து
எழுதப் போகிறான்!

பாண்டியூர் பொன். நவநீதன்

Comments