கட்டுநாயக்க விமான நிலையத்தில் “ஆர்பிக் மக்கள் ஆரோக்கிய திட்டம்" நடமாடும் சுகாதார சேவை | தினகரன் வாரமஞ்சரி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் “ஆர்பிக் மக்கள் ஆரோக்கிய திட்டம்" நடமாடும் சுகாதார சேவை

இலங்கையரின் பொதுசுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் 'ஹர்பிக் மக்கள் ஆரோக்கிய திட்டம்", விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் கேட்டுக்கொண்டதிற்கமைய கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருவோரின் பொதுசுகாதார வசதிகளை வழங்கிட முன்வந்தது.

'விமான நிலையம் மீண்டும் வெளிநாட்டவர்களுக்காக திறந்த பின் பொதுசுகாதாரத்திற்காக பல்வேறு மாற்றங்களை மிக குறுகிய காலத்தினுள் மேற்கொள்ளவேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டது. இச் செயற்திட்டத்தின் போது நாம் எதிர்கொண்ட மிகப்பெரிய சவால் வருவோரின் பொதுசுகாதார தேவைகளை பாதுகாப்புடன் மேற்கொள்வதற்கானதோர் திட்டத்தினை உருவாக்கிடலே. ஹர்பிக் இடம் கேட்டதிற்கமைய உடனடியாக செயற்பட்டு, நடமாடும் பொது சுகாதார கட்டமைப்புகளை விமான நிலையத்தினுள் ஸ்தாபித்தமைக்கமைய இச் சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்தது. இச்சந்தர்ப்பத்தின் போது ஹர்பிக் பொது சுகாதார திட்டம் எமக்கு பங்களித்தமைக்கு நாம் நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம்" என இது பற்றி கருத்து தெரிவித்த விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) தனியார் நிறுவனத்தின் தலைவர், மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜி.ஏ. சந்ரசிரி தெரிவித்தார்.

நடமாடும் இப் பொது சுகாதார கட்டமைப்பு, ஹர்பிக்கினால் பல மில்லியன் முதலீட்டுடன் நீண்ட காலமாக பொதுமக்களுக்காக சேவை வழங்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட நவீன நடமாடும் மூன்று பொதுசுகாதார கட்டமைப்புகளாகும். இம் மலசலக்கூட கட்டமைப்புகள் பல வருடங்களாக மக்கள் அதிகளவில் பங்கேற்கும் கண்டி பெரஹர, மடு தேவாலய வணக்க காலம், சிவனொளி பாதமலை பருவ காலம் போன்ற பல சந்தர்ப்பங்களில் மக்களுக்காக சேவை வழங்கியுள்ளது.

'கொவிட் 19 பரவலினால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு முகம்கொடுத்திட, குறித்த நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதையே கடந்த வருடம் முதலே ஹர்பிக் பொதுசுகாதார செயற்திட்டம் பிரதான இலக்காக கொண்டது. " என இது பற்றி கருத்து தெரிவித்த ரெகிட் பென்கிசர் லங்கா நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவர் சதுரிகா பொன்சேகா தெரிவித்திருந்தார்.

Comments