இந்திய மீனவர் ஆக்கிரமிப்பு தொடரின் 10,000 மீனவர்களுடன் படையெடுப்பேன் | தினகரன் வாரமஞ்சரி

இந்திய மீனவர் ஆக்கிரமிப்பு தொடரின் 10,000 மீனவர்களுடன் படையெடுப்பேன்

இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் இங்கிருந்து பேசிக் கொண்டிருப்பதைவிட பத்தாயிரம் வடமாகாண கடற்தொழிலாளர்களுடன் இந்தியாவிற்கு படகில் சென்று அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு யோசித்துக் கொண்டிருந்தேன் என கடற்தொழில்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு நிறுத்தப்படுவது தொடர்பில் இந்திய மீனவர்களின் பேச்சுவார்த்தை வருவதும் போவதுமாகவுள்ளது. தீர்வு என்று எதுவும் இல்லாவிட்டாலும் இந்திய மீனவர்களின் வருகை நிதந்தரமாக காணப்படுவதாக கடற்தொழிலாளர்கள் என்னிடம் முறையிடுகிறார்கள். இதனை தீர்த்துத் தராவிட்டால் ஆர்ப்பாட்டம், தொழில் முடக்கம், அமைச்சரின் வடமாகாண நடமாட்டத்தை முடக்குவோம் என்று கூறிக்கொண்டு இருக்கின்றார்கள். நானும் பொறுமை பொறுமை என்று அவர்களை சமாதானப்படுத்திக் கொண்டிருக்கின்றேன். இருந்தாலும் அது அவர்களின் நியாயமான கோரிக்கை. இதனை நான் விரைவில் தீர்க்க முற்படுவேன்.

10,000 கடற்றொழிலாளர்களுடன் இந்தியாவுக்கு படகுகளில் சென்று அங்குள்ள கடற்றொழிலாளர்களுடனும் ஆட்சியாளர்களுடனும் பேசுவதாக நான் பத்தாண்டுகளுக்கு முன்னர் கூறியிருந்தேன்.

இந்திய இழுவைப்படகுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றும்,தடைசெய்யப்பட்ட தொழில் உபகரணங்கள் ஊடாக வளங்கள் அழிக்கப்படுகின்றது வாழ்வாதாரம் சீரழிக்கப்படுகின்றது. வெளிமாவட்டத்தில் இருந்து வருகைதரும் தென்னிலங்கை மீனவர்களை கட்டுப்படுத்த வேண்டும். சாலைக்களப்பு, முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால் ஆகிய களப்புக்களை ஆழப்படுத்தி தொழில் செய்யபவர்களை வளப்படுத்த வேண்டும். அட்டைத்தொழிலை வெளிமாவட்ட மீனவர்களுக்கு அனுமதியினை கொடுக்காமல் முல்லைத்தீவு மாவட்ட தொழிலாளர்களுக்கும் அனுமதி கொடுக்க வேண்டும்.

இந்திய இழுவைப்படகுகள் மூலம் அறுக்கப்பட்ட வலைகளுக்கு நட்டஈடு வழங்க வேண்டும்.லைட்கோஸ் சுருக்குவலை போன்ற சட்டவிரோத தொழிலை கட்டுப்படுத்தி மாற்று நடவடிக்கை எடுத்து தரவேண்டும், அனுமதிக்கப்பட்ட லைலாவலை தொழிலை அனுமதிக்குமாறும்,முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைவலை தொழிலாளர்கள் போர் காரணமாக பாதிக்கப்பட்டு சொத்து இழப்பினை சந்தித்தார்கள் அவர்களும் நட்டஈடு கேட்டுள்ளார்கள்,

மறுக்கப்பட்ட கரைவலை தொழில் அனுமதியினை உள்ளூர் மீனவர்களுக்கு வழங்க வேண்டும்,வெளிச்சவீடு அமைக்க வேண்டும்,இறங்கு துறைக்கான வசதிகள் இல்லை, போன்ற பல்வேறு கோரிக்கைகளை மக்கள் முன்வைத்துள்ளார்கள்.

இவற்றை கவனத்தில் எடுத்து மக்களின் பிரச்சனையினை தீர்ப்பதற்காகவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை கடல் இலங்கை மக்களுக்கு சொந்தம் ஒருவரின் தொழில் இன்னொருவரை பாதிக்காத வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும்,அத்துமீறல் சட்டவிரோத தொழில்களுக்கும் இடம்கொடுக்க முடியாது.

புதுக்குடியிருப்பு விசேட நிருபர்

Comments