கிளுகிளுப்பூட்டிய முத்தம் | தினகரன் வாரமஞ்சரி

கிளுகிளுப்பூட்டிய முத்தம்

2014ம் ஆண்டு மிஸ் கேரளாவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தீப்தி சதி. பின்னர் படங்களில் நடித்து பிரபலமானார்.

தெலுங்கு, மராத்தி, கன்னடம், மலையாளம் என பல படங்கள், வெப் தொடர்கள் ஆகியவற்றில் நடித்துள்ளார் நடிகை தீப்தி சதி.  தமிழில் வெளியாகியுள்ள நானும் சிங்கிள் தான் படத்திலும் நடித்துள்ள தீப்தி பேட்டியளித்துள்ளார்.

காதலர்கள் தின ஸ்பெஷலாக நிறைய படங்கள் திரையரங்குகளில் வெளியாகின. R. கோபி இயக்கத்தில் அட்டக்கத்தி தினேஷ், தீப்தி சதி நடிப்பில் காதலர்கள் தினத்தை முன்னிட்டு சிங்கிள் பசங்களை கவரும் வகையில் "நானும் சிங்கிள் தான்" படம் வெளியாகியுள்ளது.

காதலர்கள் தினம் என்றால் தங்களுக்கு ஞாபகம் வருவது என்ன என்ற கேள்விக்கு, இதுவரையில் தன்னுடைய வேலன்டைன் எப்போதும் அம்மா தான் எனவும், நடிகர் ரித்திக் ரோஷன் மீது பப்பி லவ் இருந்ததாகவும் பேட்டியளித்துள்ளார் தீப்தி சதி.

இந்த ஆண்டு காதலர்கள் தினத்தை முன்னிட்டு என்ன ஸ்பெஷல் என்ற கேள்விக்கு "நானும் சிங்கிள் தான்" படத்தை பதிலாக கூறினார். மேலும் நானும் சிங்கிள் தான் படத்தை குறித்து பேசிய தீப்தி, ரசிகர்களுக்கு ஜாலியான படம் எனவும் கூறியுள்ளார். மேலும் முத்தம் குறித்தும் பல சுவாரஸ்யமான கேள்விக்கு கிளுகிளுப்பாக பதில் அளித்துள்ளார்.

Comments