அந்தமாதிரி படங்கள் பண்ண தான் ஆசை | தினகரன் வாரமஞ்சரி

அந்தமாதிரி படங்கள் பண்ண தான் ஆசை

பிக்பாஸ் பிரபலமான ஷிவானி நாரயணன் தனக்கு எந்த மாதிரியான படங்களில் நடிக்க விருப்பம் என்பதை தெளிவாக கூறியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் ஆகிய சீரியல்களில் நடித்தவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள ஷிவானி, பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும் தனது சினிமா கனவு குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.

அவர் பேசியிருப்பதாவது, எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி ரொம்ப பிடிக்கும், முந்தைய சீசன்களையெல்லாம் பார்த்திருக்கிறேன். கடந்த சீசனிலேயே நான் பங்கேற்க வேண்டியது, ஆனால் எனக்கிருந்த டிவி சீரியல் கமிட்மெண்ட்ஸால் என்னால் பங்கேற்க முடியாமல் போனது.

இம்முறை அவற்றில் இருந்து பிரேக் எடுக்க விரும்பியதால், அந்த நேரத்தை பிக்பாஸில் செலவழிக்கலாம் என நினைத்தேன். பிக்பாஸ் ஷோ எனக்கு பல அனுபவங்களை கொடுத்தது. பிக்பாஸ் வீட்டில் இருந்த 90 நாட்களும் ஃபன் மற்றும் எண்டெர்டெய்ன்மென்ட்தான். இதன் மூலம் எனக்கு நல்ல நண்பர்களும் கிடைத்துள்ளார்கள்.

எனக்கு மற்றவர்களிடம் பழக நாட்கள் ஆகும். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நான் மாறிவிட்டதாக நினைக்கிறேன். எனக்கு எப்போதும் ஹேப்பியாக இருக்க வேண்டும். குட்டி ஸ்டோரி பாடலில் வருவது போல் லைஃப் இஸ் ஷார்ட்.. ஆகையால் என்னுடைய மந்திரம் எப்போதும் ஹேப்பியாக இருக்க வேண்டும் என்பதுதான்.

என் அம்மாதான் எனக்கு எல்லாமும். பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்த சில விஷயங்களால் என் அம்மா ரொம்பவே காயப்பட்டுள்ளார் என்பதை உணர்ந்தேன். என் அம்மா எனக்கு எப்போதும் நல்லதுதான் நினைப்பார். என்னை நான் நிரூபிக்க வேண்டும் என்றுதான் கூறுவார். அதனால் நான் செய்ததை யாரிடமும் நியாயப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.

எனக்கு நடிப்பு பிடிக்கும் நடிக்க பிடிக்கும். எனக்கு சினிமா துறைக்குள் செல்ல விருப்பம் இருந்தது. அதிர்ஷ்டவசமாக எனக்கு டெலிவிஷனில் வாய்ப்பு கிடைத்தது. நான் சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போது எனக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அப்போது எனக்கு 18 வயதுதான்.

டிவியில் நடித்து விட்டு பின்னர் படங்களில் நடிக்கலாம் என்று நினைத்திருந்தேன். தற்போது எனக்கு 3 வாய்ப்புகள் கிடைத்துள்ளது. விரைவில் இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். எனக்கு ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடிக்கத்தான் ஆசை.

ஆனால் நான் அதற்கு சிறு பெண் என்று நினைக்கிறேன். தாக்கத்தை ஏற்படுத்தும் கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும். க்யூட், சீரியஸ் எல்லாம் மேட்டரே இல்லை. நான் என்னுடைய பெஸ்ட்டை கொடுக்க வேண்டும். இவ்வாறு நடிகை ஷிவானி நாராயணன் தெரிவித்துள்ளார்.

Comments