
‘எதிர் கால சந்ததியின்
இளைய தலை முறைகள்
நாம் வளமான சமுதாயத்தின்
வருங்கால வாரிசுகள்,
பணிவோடு துணிவு
கொணடு பல்சுவை
சுற்றிடுவோம் நாம்
பட்டங்கள் பல பெற்று
பார்போற்ற வாழ்ந்திடுவோம்,
கல்வியே கண்ணாய்க்
கொண்டு காரியம் ஆற்றிடு வோம்
நாம் கற்ற படி
வாழ்ந்திங்கு கண்ணியத்
தைக் காத்திடுவோம்,
ஒழுக்கமே உயிராய்க்
கொண்டு உயர்வுகள்
பெற்றிடுவோம் நாம்
ஒற்றுமையாய் வாழ்ந்திங்கு
உலகினை உயர்ந்திடுவோம்,
வெற்றியுடன் தோல்விதனை
சமமாக் கருதிடுவோம்
நாம் வேற்றுமை அகற்றியே
வெற்றி பல பெற்றிடுவோம்
கே.எஸ். ஹில்மி,
சம்மாந்துறை-10.