உணர்வின் சங்கமம் | தினகரன் வாரமஞ்சரி

உணர்வின் சங்கமம்

நான் சூடிய கவிப் பட்டம் 
என்னோடு மட்டுமே... 
என்னையே எனக்கு அறிமுகமாகியது 
என் 
கவிப் பயணம்... 
என் வரிகள் 
எனக்குள் மட்டுமல்லாது 
உனக்குள்ளும் கலந்திட 
வேண்டும்... 
யாரிடமும் பாராட்டு பெற 
என் வரிகளைச் சித்தரிக்கவில்லை... 
என் உணர்வுகளை சொல் வண்ணத்தில்  
பதிவிடவே சித்தரித்தேன்.. 
யாரிடமும் கவி வர்ணன் 
என்ற பட்டம் தேவையில்லை.. 
என் உணர்வுகளின் சங்கமமே 
இவ் வரிகளின் ஊற்று...

ரா. வருண்ஷாந் 
நாவலப்பிட்டி.

Comments