மக்களது பொதுப் பிரச்சினைகளை தீர்த்துவைக்க அரச அதிகாரிகள் ஒன்றிணைந்து பணியாற்ற ஜனாதிபதி கோரிக்கை | தினகரன் வாரமஞ்சரி

மக்களது பொதுப் பிரச்சினைகளை தீர்த்துவைக்க அரச அதிகாரிகள் ஒன்றிணைந்து பணியாற்ற ஜனாதிபதி கோரிக்கை

அரச அதிகாரிகள் தனித்தனியாக வேலை செய்யாமல் ஒன்றாக கலந்தாலோசித்து மக்களின் பிரச்சினைகளைப் பார்த்து உகந்த தீர்வுகளைக் காண வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.  

அதிகாரிகள் ஒருவருக்கொருவர் பேசாததால் பொதுவான பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமலிருக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் அந்தந்த துறைகளில் தீர்மானம் எடுக்கக்கூடிய அதிகாரிகள் வேண்டுமென்றும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

புத்தளம் மாவட்டத்தின் கருவெலகஸ்வெவ,பலீகம கிராமத்தில் நேற்று நடைபெற்ற 11 ஆவது ‘கிராமத்துடன் கலந்துரையாடல்’ நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Comments