இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பயணித்த ஜீப் வண்டி விபத்து | தினகரன் வாரமஞ்சரி

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பயணித்த ஜீப் வண்டி விபத்து

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ பயணித்த சொகுசு வாகனம் சிலாபம் - பல்லம சேருகெலே பகுதியில் நேற்றுக் காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. வாகனம் வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சாரதி உள்ளிட்ட 03 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

எவ்வாறாயினும், தென்னை, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை மேம்பாடு மற்றும் அவை சார்ந்த கைத்தொழில் பண்டங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சருக்கு எந்தவித பாதிப்பும் இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளது.

காயமடைந்த மூன்று பேரும் சிகிச்சைகளுக்காக சிலாபம், மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Comments