அரச பாடசாலைகளுக்கு பெப்.25 முதல் 17 நாட்கள் குறுகியகால விடுமுறை | தினகரன் வாரமஞ்சரி

அரச பாடசாலைகளுக்கு பெப்.25 முதல் 17 நாட்கள் குறுகியகால விடுமுறை

நாட்டிலுள்ள அரச பாடசாலைகளுக்கு எதிர்வரும் பெப்.25ஆம் திகதி முதல் மார்ச் 14ஆம் திகதிவரை குறுகிய கால (17நாட்கள்) விடுமுறை வழங்கப்படவிருக்கி றது.

இதுபற்றி கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மாகாண பிரதம செயலாளர்கள் தொடக்கம் அதிபர்கள் வரை சுற்று நிருபம் மூலம் அறிவித்துள்ளார்.  

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2020க்கான க.பொ.த சா.தரப் பரீட்சை நடைபெறவிருப்பதே இவ்விடுமுறைக்கான காரணமென அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த க.பொ.த. சா.தரப்பரீட்சை எதிர்வரும் மார்ச் 1ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை நடைபெறவிருப்பது தெரிந்ததே.

எனவே பரீட்சைக்காக பெப்.25ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்படும் சகல பாடசாலைகளும் மீண்டும் மார்ச் மாதம் 15ஆம் திகதி திறக்கப்படவுள்ளன.

அது சித்திரை வருடப்பிறப்பு விடுமுறைக்காக மீண்டும் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி மூடப்படவிருக்கின்றது.

அவ்வாறு மூடப்படும் பாடசாலைகளில் தமிழ்,சிங்களப் பாடசாகைள் இரண்டாம் தவணைக்காக ஏப்ரல் 19ஆம் திகதி திறக்கப்படும். அதேவேளை முஸ்லிம் பாடசாலைகள் மே மாதம் 17ஆம் திகதி திறக்கப்படும் என கல்வியமைச்சு சுற்றுநிருபம் மூலம் அறிவித்துள்ளது.

முஸ்லிம்களின் ரமழான் நோன்புக்காக ஏப்ரல் 10ஆம் திகதி முதல் மே 16வரை விடுமுறை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைதீவு குறூப் நிருபர்

Comments